உன்னிச்சை: உன்னிச்சை இருநூறுவில் முகைதீன் ஜூம்மா பள்ளிவாயல் நிருவாகமும் இருநூறுவில் நலன்புரிச்சங்கமும் இணைந்து – நலன்புரிச்சங்க ஆலோசகரும் சமூக சேவையாளருமான இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் காத்தான்குடி 167சி பல்நோக்கு கட்டடத்தில் நேற்று 09.02.2014 ஞாயிற்றுகிழமை மாலை இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் தங்களது சம்மதத்தினை தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் கருத்து தெரிவிக்கையில்…..,
1985ம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வவுணதீவு பிரதேச பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை இருநூறுவில் கிராம மக்களாகிய நாங்கள் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சுமுகமான சூழ்நிலை நிலவுகின்ற போதிலும் மீள்குடியேற்றம் கைகூடாத நிலையில் பூர்வீகமாக விவசாயத் தொழிலையே பிரதானமாக செய்து வாழ்ந்து பழக்கப்பட்ட இம்மக்கள் ஒருவகையான விரக்தி மனநிலையில்; பெரும்பாலானோர் கூலித் தொழிலர்களாகவே இன்றும் காத்தான்குடி மஞ்சந்தொடுவாய் ஏறாவூர் போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றோம்.
இந்நிலையில் கடந்த 05.02.2014 அன்று காத்தான்குடி பிரதேச செயலாளர் முஸம்மில் தங்களை அழைத்து உங்களது மீள்குடியேற்றப்பிரச்சினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்; தலைமையில் நடவடிக்கைகள் கடந்த வாரம் முதல் முன்னெடுக்கப்படுகின்றன எனவே நீங்கள் எல்லோரும் உங்களது சொந்த ஊருக்கு மீளக்குடி அமர தயாரா என காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கேட்டுக் கொண்டபோது பூரண சம்மதத்தை தெரிவித்தோம்.
இருந்த போதிலும் எங்களில் பெரும்பாலானோர் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளாதததனால் இதனை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதற்காகவும் சம்மதத்ததை கேட்டறிவதற்காகவும் மேற்படி கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனவே ஒட்டுமொத்தமாக நாங்கள் அனைவரும் பிறந்த மண்ணிலே மீண்டும் வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்று பூரணசம்மதத்தை தெரிவித்ததுடன் நாங்கள் எவ்வாறு தமிழ் சகோதர்களோடு அன்னியொன்னியமாக வாழ்ந்தோமோ அவ்வாறே மீண்டும் வாழ அசைப்படுகின்றோம் அந்த நாளுக்காக நாங்கள் காத்திருக்கறோம் என மனம் நெகிழ வயோதிபத்தாய்மாரும் தெரிவித்ததோடு அதே இடத்திலே தங்களதுவாக்காளர் இடாப்புகளை இங்கிருந்து விடுவித்து கொண்டே செல்வதற்கும் பூரண சம்மதத்தை தெரிவித்தார்கள் .
அத்தோடு இத்தனை காலங்களுக்கு பின்னரும் எங்களது உணர்வுகளை புரிந்து இம்மீள்குடியேற்றத்தக்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற மாவட்ட அரச அதிபர் காத்தான்குடி பிரதேச செயலாளர் உதவி பிரதேச செயலாளர் வவுணதீவு பிரதேச செயலாளர் உள்ளடங்களாக கிராம சேவை உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்
இந்நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர் பசீர் அஹமட் இருநூறுவில் மு.ஜூ.பள்ளிவாயல் பதில் தலைவர் கே.எம்.முகைதீன் செயலாளர் எம்.எஸ். ஆதம் லெவ்வை பொருளாளர் எம்.கே. அப்துல் நாசர் மற்றும் இருநூறுவில் முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டனர்.
Published by


Leave a comment