நகரபிதாவின் வேண்டுகோளுக்கிணங்க பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் நகரசபைக்கு வருகை

unnamed (1)ரைஸ்

கிண்ணியா: கிண்ணியா நகரசபைக்குட்பட்ட பகுதி நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபின் முன்னெடுப்புக்களில் தற்போது வெகுவாக அபிவிருத்தி கண்டுவரும் நிலையில மேலும் கிண்ணியாவினை அபிவிருதிப்பாதையில் கொண்டு செல்லும் பொருட்டு கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபின் வேண்டுகோளுக்கிணங்க பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் யொஹான் செனவிரத்தின கிண்ணியா நகரசபைக்கு உத்தியோகபூர்வமற்ற விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

கரையோர பாதுகாப்பு, நகரசபை அபிவிருத்தி, கரையோர அழுகுபடுத்தல் போன்ற விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது. கழிவுகள் சேகரிப்பு இடம் சம்பந்தமாக அவ்விடத்தினை பார்வையிட்டு அதற்கான மேலதிக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய உதவிகள் சம்பந்தமான வேண்டுகோளையும் நகரபிதா இங்கு பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் யொஹான் செனவிரத்தினவிடம் முன்வைத்தார். இதன் போது பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ‘ சில குறிப்பிட்ட அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்வதற்காக 1 கோடியே 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்துள்ளார்’ மேலும் கிண்ணியா மட்டக்களப்பு கரையோர பாதுகாப்பு சம்பந்தமாகவும் கருத்திற் கொண்டு செய்து தரவேண்டுமென நகரபிதா மேலதிக செயலாளரிடம் கேட்டுக்கொண்டார். 

unnamed

இந்நிகழ்வில் கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், நகரசபை உறுப்பினர்களான ஏ.கே.எம். பாஜில், எம்.ஏ.எம். நிஜாம், CCD இன் கீழுள்ள இபாட் திட்ட முகாமையாளர் திரு. பிரேமதிலக, எம்.ஓ.எச். றிஸ்வி, சுகாதார பரிசோதகர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment