கிண்ணியா: தாய்லாந்தின் பேங்கொக் நகரில் நடைபெறவிருக்கும் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோரம் பேணல்; சம்பந்தமான ஒருவாரகால விசேட கருத்தரங்கில் கலந்து கொள்லவென கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் நேற்றிரவு தாய்லாந்து பயணமானார்.
இலங்கை பாகாப்பு அமைச்சின் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோரம் பேணல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட கருத்தரங்கு கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோரம் பேணல் சம்பந்தமான விளிப்புணர்வு செயற்திட்டத்தின் கீழ் இடம்பெறவுள்ளது.
இக்கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், CCD மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தன மேலும் சில உத்தியோகத்தர்களும் தாய்லாந்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு அங்கு சென்றுள்ளனர்.
இக்கருத்தரங்கில் சர்வதேச நாடுகளையும் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கரையோர பாதுகாப்பு சம்பந்தமான விசேட அதிகாரிகளும் ஆர்வலர்களும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Leave a comment