Category: Your Kattankudy
-
இருபது20 தரவரிசை: இந்தியா முதலிடம்! குசால் பெரேரா பத்து இடங்களுக்குள் முன்னேற்றம்!!
டுபாய்: சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், இலங்கையை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு முதல் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி கூடுதலாக ஐந்து புள்ளிகள் பெற்று 115 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியது. அவுஸ்திரேலியா ஐந்து புள்ளிகள் குறைந்து 110 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு பின்தங்கியது.
-
மாயமான விமானத்தில் வழங்கப்பட்ட மங்குஸ்தான் பழத்தில் விஷம்?
-S-90 கோலாலம்பூர்: மலேசிய விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் விஷம் தடவப்பட்டதா என்று மலேசிய பொலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்திய பெருங்கடலுக்குள் விழுந்ததாக கூறப்படும் மலேசிய விமானம் MH.370-ஐ தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் இந்திய பெருங்கடலுக்கு வந்துள்ளது. இதனால் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது.
-
வீட்டுப் பண்ணையாளர்களுக்கான ஒரு மாத காலம் பூர்த்தியான நாட்டுக் கோழிக்குஞ்சுகள் மானிய அடிப்படையில் வழங்கப்பட்டது
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான இல்மி அஹமட் லெவ்வை அவர்களினால் இன்று (02.04.2014) காலை 9.30 மணியளவில் காத்தான்குடி செஞ்சிலுவைச்சங்க மண்டபத்தில் – வீட்டுப் பண்ணையாளர்களுக்கான ஒரு மாத காலம் பூர்த்தியான நாட்டுக் கோழிக்குஞ்சுகள் மானிய அடிப்படையில் வழங்கப்பட்டது.
-
பிரிட்டனின் கல்வி ‘ஏற்றுமதி’ வருமானத்தில் வீழ்ச்சி
லண்டன்: ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய வெளிநாட்டு வருமான வழிகளில் ஒன்று தான் அதன் கல்வி. நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் ஆண்டுக்கு 10 பில்லியன் பவுண்டுகளை கல்வியே ஈட்டித்தருகிறது. வெளிநாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு கிடைக்கும் வருமானத்துக்கும் இங்கிருந்து செல்லும் வெளிநாட்டு செலவினத்துக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருக்கின்ற இன்றைய சூழலில் கல்வித்துறையில் ஈட்டப்படுகின்ற இந்த வருமானம் மிக முக்கியமானது.
-
பறிபோனது பாகிஸ்தானின் அரைஇறுதி பெருமை!
டாக்கா:இருபது20 உலகக் கிண்ணத்தொடரில் குறைந்தது அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்த ஒரே அணி என்ற பெருமையை பாகிஸ்தான் அணி பறிகொடுத்தது. பாகிஸ்தான் அணி 2007ம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் தோல்வி கண்டாலும், 2009ம் ஆண்டு சம்பியன் ஆனது.
-
இலங்கையில் சிவில் அமைப்புக்கள் தடை!
SHM லண்டன்: வெளிநாடுகளில் தடைசெய்யப்படாத சிவில் அமைப்புகளை தடை செய்ததன் மூலம் இலங்கை சர்வதேச மட்டத்தில் மேலும் குழப்பமான பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
மேற்கிந்தியாவின் பலத்தை வீழ்த்துமா இலங்கை?
SHM டாக்கா: கிரிக்கட் உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பித்த 1974 மற்றும் அதன் பின்னரான 1980களில் கிரிக்கட் வரலாற்றில் அசைக்க முடியாத ஜாம்பவான்களாக திகழ்ந்தவர்கள்தான் மேற்கிந்தியத் தீவுகள்அணி. மேற்கிந்தியத் தீவுகள் அணியை வெற்றி பெற குறிப்பாக ஆசிய அணிகள் அன்று பல வருடங்கள் காத்திருந்ததும் வரலாறு.
-
மலேசிய விமானம் மாயமான காரணம் தெரியாமலேயே போகலாம்: மலேசிய பொலிஸ் அதிகாரி
S-90 கோலாலம்பூர்: மலேசிய விமானம் மாயமானதற்கான காரணம் தெரியாமலேயே போகலாம் என்று மலேசியா எச்சரித்துள்ளது. கடந்த மாதம் 8ம் தேதி மாயமாகி இந்திய பெருங்கடலுக்குள் விழுந்துவிட்டதாகக் கூறப்படும் மலேசிய விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.
-
சிலி: 8.1 ரிக்டர் பயங்கர நிலநடுக்கம்: 5 பேர் பலி, சுனாமி எச்சரிக்கை- 300 பெண் கைதிகள் தப்பியோட்டம்!
– SHM சான்டியாகோ: தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் வட மேற்கு கடல் பகுதி அருகே நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்திற்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.
-
ஜெர்மனியின் விமான நிறுவனமான லுஃப்தான்ஸா அடுத்த மூன்று நாட்களில் சுமார் 4000 சேவைகளை ரத்து செய்கிறது!
லுஃப்தான்ஸா: பணி நிலைமகளை மேற்கோள்காட்டி, விமான ஓட்டிகள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாலேயே இந்த அளவுக்கு விமான சேவைகளை லுஃப்தான்ஸா ரத்து செய்கிறது. விமான ஓட்டிகளின் வேலை நிறுத்தம் காரணமாக 4000 விமான சேவைகள் ரத்தாவதால் பரந்துபட்ட அளவில் பயணத்தடைகள் பெருமளவுக்கு பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிலி நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை, அவசரநிலை பிரகடனம்
சிலி: சிலியில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு வடக்குப் பிராந்தியங்கள் பேரழிவு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 5 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வடகிழக்கே சுரங்கப் பகுதிகள் நிறைந்த இக்குய்கியூ பிராந்தியத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 8.46 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
காத்தான்குடி புதிய மத்தியஸ்தர்கள் சபையின் 2014 ஆண்டுக்கான காலாண்டு ஒன்று கூடல் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நீதி அமைச்சின் கீழ் இயங்கும் காத்தான்குடி புதிய மத்தியஸ்தர்கள் சபையின் 2014 ஆண்டுக்கான காலாண்டு ஒன்று கூடல் நிகழ்வு கடந்த வாரம் 30-03-2014 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி கடற்கரையிலுள்ள ஆ.ம. ஹாஜியார் வளாகத்தில் மத்தியஸ்தர் சபையின் தவிசாளர் எம்.ஐ.எம்.உசனார் தலைமையில் இடம்பெற்றது.