Category: Your Kattankudy
-
பால் தொட்டியில் குளித்த ‘சீஸ்’ நிறுவன ஊழியர்கள்- அதிர்ச்சியில் மக்கள்
– S-90 மொஸ்கோ: உண்ணும் உணவான சீஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள பால் தொட்டியில் அத்தொழிற்சாலை ஊழியர்கள் குளியல் போட்டது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சைபீரிய நகரமான ஓம்ஸ்க்கில் செயல்பட்டுவரும் ஒரு சீஸ் உற்பத்தித் தொழிற்சாலையின் ஊழியர்கள் இணையதளத்தில் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நாளைய போட்டியில் இந்தியா வென்றால் டோணி சரித்திரம் படைப்பார்!
– SFR- டாக்கா: நாளை இடம்பெற இருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றால் 20 ஓவர் கிண்ணத்தை இரண்டு முறை வென்ற பெருமை இந்திய அணியின் தலைவர் டோணிக்கு சேர்வதுடன், டோணி தலைமையிலான இந்திய அணி நான்கு உலகத் தொடர்களை வென்ற பெருமையை பெற்றுக் கொள்வதுடன், உலக கிண்ணங்களை நான்கு முறை தொடர்ச்சியாக வெற்றி பெரும் நாடாகவும் இந்தியா அமையும்.
-
1971- ஜே.வி.பி. கிளர்ச்சி….
சுதந்திர இலங்கையின் ஆயுதப் புரட்சி ஆரம்பமாகி மனித மற்றும் பொருள் அழிவுக்கு வித்திட்ட தினமாக 1971ம் ஆண்டின் ஏப்ரல் 4ம் திகதி நம் நாட்டு மக்களினால் வேதனையுடன் நினைவு கூரும் ஒரு நாளாக இருக்கின்றது. இதற்கு முன்னர் இலங்கையில் என்றுமே ஜனநாயக ரீதியில் மக்க ளால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எவருமே ஆயுதம் தாங்கி பொலிஸ் நிலையங்களைத் தாக்கி புரட்சி ஒன்றை ஏற்படுத்தவில்லை.
-
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் 37 மாணவர்களுக்கு 9 ஏ
மட்டக்களப்பு: கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 37 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். இது இக்கல்வி வலயத்தின் வரலாற்றுச் சாதனையென வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. எம். அஹமட் லெப்பை தெரிவித்துள்ளார்.
-
புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் இலங்கை வர அரசு தடை
லண்டன்: வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்ற 16 தமிழ் அமைப்புகளைத் தடைசெய்துள்ள இலங்கை அரசாங்கம், இந்த அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகின்ற வெளிநாடுகளில் வசிக்கின்ற 424 பேரை இலங்கைக்குள் பிரவேசிப்பதைத் தடைசெய்திருக்கின்றது.
-
இலங்கை அணியின் 7 வருட கனவு நனவாகுமா?
R40- டாக்கா: உலக இருபது20 உலகக் கிண்ணப் போட்டி முதன் முதலாக 2007ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் இடம்பெற்றது. தற்பொழுது 2014 உலக இருபது20 இறுதிப்போட்டிக்காக இந்தியாவுடன் விளையாட இலங்கை அணி காத்திருக்கின்றது. வெற்றிக்கனவுகள் நிறைவேற இலங்கை இரசிகர்கள் ஆராவாரத்துடன் காத்திருக்கின்றனர்.
-
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் ஐந்து மாணவிகள் 9 ஏ சித்தி
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நேற்று வியாழக்கிழமை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் ஐந்து மாணவிகள் 9 ஏ சித்தி பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.ஏ.சி.ஏ. சத்தார் தெரிவித்தார்.
-
விளை நிலம் ஓவிய கல்விக் கண்காட்சி – மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலையில்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலையின் விளை நிலம் ஓவிய கல்விக் கண்காட்சியும், துளிர்க்கும் தூரிகை அறிமுக ஏடு வெளியீடும் நிகழ்வு வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலை குறொப்ட் மண்டபத்தில் 04-04-2014 இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
-
பிரதேச செயலகத்திற்கு குப்பைத் தொட்டி வழங்கி வைப்பு
ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபைக்குட்பட்ட அரச மற்றும் பொது இடங்கள் பலவற்றிற்கு கழிவு சேகரிப்புக்கென குப்பைத் தொட்டிகள் அண்மையில் நகபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபினால் வழங்கி வைக்கப்பட்டது. கிண்ணியா பிரதேச செயலகத்தின் பாவணைக்கென பிரதேச செயலாளர் எஸ். கிரிஸ்நேந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபினால் குப்பைத் தொட்டி இன்று வழங்கி வைக்கப்பட்டது.
-
சாதாரண தரப் பரீட்சை சாதனையாளர்கள்
அபூஹக் கொழும்பு: கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஒன்பது பாடசாலைகள் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றன. கம்பஹா ரத்னாவலீ பாலிகாவைச் சேர்ந்த கே.ஏ.மெனுஷிகா ஜயனி காரியவசம் மற்றும் கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தபோதா ஹரிந்திரி கங்கொடவில ஆகியோர் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
-
ரிதிதென்ன இக்ரா குர்அன் மதரசாவின் பரிசளிப்பு விழா – பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
-டீன் பைரூஸ்- மட்டக்களப்பு: ரிதிதென்ன அபுபக்கர் சித்தீக் ஜூம்ஆ பள்ளிவாயலின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இக்ரா குர்அன் மதரசாவின் பரிசளிப்பு விழா தலைவர் எஸ்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது.பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாMA/MP கலந்து கொண்டார்.
-
அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 26 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!
– S-90 சிட்னி: சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயற்சித்த 26 இலங்கைத் தமிழர்களை இந்திய கடலோரக் காவல்படை தடுத்து நிறுத்தி மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பியுள்ளனர்.