டுபாய்: சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், இலங்கையை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு முதல் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி கூடுதலாக ஐந்து புள்ளிகள் பெற்று 115 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியது. அவுஸ்திரேலியா ஐந்து புள்ளிகள் குறைந்து 110 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு பின்தங்கியது.
துடுப்பாட்ட தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லி, மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மற்றொரு இந்திய வீரரான ரவிச்சந்திர அஸ்வின் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹால்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இலங்கையின் குசேல் பெரேராவும், தென் ஆப்பிரிக்காவின் டுமினியும் முதல் முறையாக முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளனர்.
பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரி அணியின் சக வீரரான சுனில் நரேனை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளார். 109 புள்ளிகளைப் பெற்று 855 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இவர், சகவீரரான சுனில் நரேனை விட 45 புள்ளிகள் கூடுதலாக பெற்றுள்ளார்.
Published by


Leave a comment