டாக்கா: நாளை இடம்பெற இருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றால் 20 ஓவர் கிண்ணத்தை இரண்டு முறை வென்ற பெருமை இந்திய அணியின் தலைவர் டோணிக்கு சேர்வதுடன், டோணி தலைமையிலான இந்திய அணி நான்கு உலகத் தொடர்களை வென்ற பெருமையை பெற்றுக் கொள்வதுடன், உலக கிண்ணங்களை நான்கு முறை தொடர்ச்சியாக வெற்றி பெரும் நாடாகவும் இந்தியா அமையும்.
இந்தியா 2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. 2013-ல் சம்பியன்ஸ் கோப்பையையும் டோணி கைப்பற்றிக் கொடுத்தார்.
தற்போது 20 ஓவர் உலகக் கோப்பையை டோணி வென்றால், 2 முறை இந்த கோப்பையை வென்ற பெருமைக்குரிய தலைவராவார் டோணி.
இந்தியாவின் இந்தக் கனவுகளை சிதைத்து தனது 7 வருட கனவை நிறைவேற்றுவது இலங்கை அணிக்குரிய பொறுப்பாக அமைகின்றது.
Published by
![dhoni-2401-ap_350_100312052735[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/01/dhoni-2401-ap_350_1003120527351.jpg?w=150&h=96)


Leave a comment