கொழும்பு: கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஒன்பது பாடசாலைகள் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றன. கம்பஹா ரத்னாவலீ பாலிகாவைச் சேர்ந்த கே.ஏ.மெனுஷிகா ஜயனி காரியவசம் மற்றும் கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தபோதா ஹரிந்திரி கங்கொடவில ஆகியோர் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
மாத்தறை ராஹுல வித்தியாலயத்தைச் சேர்ந்த எம்.டபிள்யூ.உசித தேஷான் குணசேகர இரண்டாம் இடத்தினையும் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் எம்.ரடீன் லசிது தென்னகோன் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.
கொழும்பு ராஜகீய வித்தியாலயத்தைச் சேர்ந்த கலிந்து சேதிக விக்ரமசிங்க மற்றும் காலி சுவுத்லேன்ட் வித்தியாலயத்தைச் சேர்ந்த றோஷானா தரிந்து மற்றும் கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எம்.எச்.திலினி பொன்சேகா ஆகியோர் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
கண்டி மஹமாய பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆர்.எம்.சௌமியா குமாரிஹாமி அபேரத்ன மற்றும் குருநாகல் மலியதேவ பாலிகாவைச் சேர்ந்த கே.துலங்சனா மிணிகிரணி தர்மசிரி ஆகியோர் ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
இந்தச் சாதனையாளர்களுக்கு நேற்றைய தினம் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்ததோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்தனர்.
இந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி அன்பளிப்புகளையும் வழங்கினார்.
Published by

Leave a comment