கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் ஐந்து மாணவிகள் 9 ஏ சித்தி

balikaபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நேற்று வியாழக்கிழமை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் ஐந்து மாணவிகள் 9 ஏ சித்தி பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.ஏ.சி.ஏ. சத்தார் தெரிவித்தார்.

இதில் முஹம்மட் ஜிப்ரி பாத்திமா ரிஸ்மா, முஹம்மட் ஜௌபர் பாத்திமா ஜெஸா, நூர் முஹம்மட் பாத்திமா ஸப்னா, சேகு முஹைதீன் பாத்திமா நுஹா, முஹம்மட் பஷீர் ரிஸா பத்வின் என்ற 5 மாணவிகளுமே 9 ஏ சித்தி பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.ஏ.சி.ஏ.சத்தார் மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment