மட்டக்களப்பு: மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலையின் விளை நிலம் ஓவிய கல்விக் கண்காட்சியும், துளிர்க்கும் தூரிகை அறிமுக ஏடு வெளியீடும் நிகழ்வு வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலை குறொப்ட் மண்டபத்தில் 04-04-2014 இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி.ஆர். கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எஸ். உதயகுமார் கலந்து கொண்டார்.
இதன் போது பிரதம அதிதியினால் விளை நிலம் ஓவிய கல்விக் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், துளிர்க்கும் தூரிகை அறிமுக ஏடும் வெளியீட்டு வைக்கப்பட்டது இதன் முதற்பிரதியை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எஸ்.உதயகுமாருக்கு வழங்கி வைத்தார்.
இங்கு துளிர்க்கும் தூரிகை அறிமுக ஏட்டின் நயவுரையை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் கலாநிதி.எஸ்.ஜெய்சங்கர் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. எஸ்.கனேஸ்வரன், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரி சமன் குமார,மட்டக்களப்பு பொதுச் சுகாதார பரிசோதகர் தேவனேசன், மட்டக்களப்பு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவராஜ் உட்பட இந்து மதப் பெரியார்கள், உதவி அதிபர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Published by

Leave a comment