மட்டக்களப்பு: கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 37 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். இது இக்கல்வி வலயத்தின் வரலாற்றுச் சாதனையென வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. எம். அஹமட் லெப்பை தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 21 மாணவர்களும் ஓட்டமாவடி கோட்டத்தில் 09 மாணவர்களும் ஏறாவூர் கோட்டத்தில் 07 மாணவர்களும் சகல பாடங்களிலும் விசேட சித்தி பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் தொடர்பாக அண்மைக் காலத்தில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் பொதுப் பரீட்சை அடைவு மட்டம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதேவேளை பெறுபேறுகள் வெளியானதையடுத்து வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. எம். அஹமட் லெப்பை மாணவர்கள் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் ஊக்கமளித்த பெற்றாருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்துள்ளார்.
விசேட சித்தியெய்திய மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வுகள் அடுத்த வாரம் நடாத்தப்படவுள்ளன.
– தினகரன்
Published by
![Batticaloa[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/batticaloa11.jpg?w=150&h=112)
Leave a comment