Category: Your Kattankudy
-
சங்ககாரவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பு
SMH கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி 20க்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் வீரர்களுக்கு அண்மையில் நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட வரவேற்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
‘புதிய நோயால்’ வாழ்க்கையை இழந்து தவிக்கும் இளைஞர்கள்
– S-90 இன்றைய விரைந்து ஓடும் காலகட்டத்தில் எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றது ஒரு புது வியாதி. குறிப்பாக இளைஞர்களைத் தாக்கும் இவ்வியாதி கிட்டதட்ட அவர்களை அழிவுப்பாதையிலேயே தள்ளி விட்டு விடுகின்றது.
-
ஹிலாரி கிளிண்டன் மீது செருப்பு வீச்சு!
S-90 சிட்னி: அவுஸ்திரேலியாவில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ஹிலாரி கிளிண்டன் மீது பெண் ஒருவர் பாதணியை வீசி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் லொஸ் வேகாஸ் நகரில் உள்ள மண்டலே பே ஹோட்டல் ஒன்றில் முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளின்டன் நேற்று உரையாற்றினார்.
-
யார் இந்த கோபி..?
AK-77 வவுனியா: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக சொல்லப்பட்ட கோபி உட்பட மூன்று பேர் ராணுவத்துடனான மோதல் ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. வவுனியா நெடுங்கேணி என்ற இடத்தில், நேற்று அதிகாலை இலங்கை ராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
-
‘பங்களாதேஷ் சென்று கிரிக்கட் மெச் பார்க்க முடிந்த உங்களால், துன்பப்படும் மன்னார் மக்களை ஏன் நேரில் சென்று பார்க்க முடியவில்லை’ SLMC தலைவரிடம் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கேட்கிறார்
PMGG ஊடகப்பிரிவு மன்னார்: தமது சொந்த நிலங்கள் படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீளக்குடியேறுவதற்கு நிரந்தர இடம் ஏதுமின்றி கடந்த பல வாரங்களாக அல்லல படும் மன்னார்- மறிச்சிக்கட்டி மக்கள் விடயத்தில், SLMC தலைவர் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்பதனைச் சுட்டிக்காட்டும் குறுஞ்செய்தி ஒன்றினை பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் இன்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
-
க.பொ.த சா/தர மாணவர்களை இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனங்களின் பால் ஈர்ப்பதற்கான முன்னோடி வழி காட்டல் கருத்தரங்கு
அஸ்மி தாஜூதீன் (மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், காத்தான்குடி) காத்தான்குடி பிரதேச செயலக தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு இலங்கை காத்தான்குடி: ஜமாஅத்தே இஸ்லாமி காத்தான்குடி மன்ற அனுசரணையுடன் இன்ஷா அல்லாஹ் க.பொ. த சா/தரம் எழுதி விட்டு இஸ்லாமிய உயர் கல்வி வாய்ப்புக்களை எதிர் பார்த்திருக்கும் ஆண் மாணவர்களுக்கான இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனங்களான ஜாமீயா நளீமியா, மாதம்பை இஸ்லாஹியா
-
நிர்வாக சேவை அதிகாரிகளுக்குப் பாராட்டு
ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவாகி தற்சமயம் உதவிப் பிரதேச செயலாளர்களாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் ஏறாவூரைச் சேர்ந்த அதிகாரிகளைப் பாராட்டும் விழா நேற்று இரவு 11.04.2014 ஏறாவூரில் இடம்பெற்றது. 2012 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவாகி தற்சமயம் ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் எம்.ஏ.சி. றமீஷா, மஹாஓயா உதவிப் பிரதேச செயலாளர் ஐ.எம். றிக்காஸ், மாஹோ உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எம். அல் அமீன், கிழக்கு மாகாண…
-
தஃவாவும் அது ஏற்படுத்திய தாக்கமும் எனும் தலைப்பில் பாலமுனை மஸ்ஜீதுல் அம்மார் ஜூம்மா பள்ளிவாயலில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜூம்மா உரை ஓடியோ ஓலிப்பதிவு
ஓலிப்பதிவு- பழுலுல்லாஹ் பர்ஹான் தலைப்பு- தஃவாவும் அது ஏற்படுத்திய தாக்கமும் ஜூம்மா உரை-அஷ்ஷேய்க் எம்.எல்.எம்.முபாறக் (மதனி) காலம்-11-04-2014 வெள்ளிக்கிழமை இடம்- பாலமுனை மஸ்ஜீதுல் அம்மார் ஜூம்மா பள்ளிவாயல்.
-
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குடியேற்றக்காணிகளை மீண்டும் பாரம்பரிய தமிழ், முஸ்லிம் உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நடவடிக்கை
பழுலுல்லாஹ் பர்ஹான் முல்லைத்தீவு: யுத்தம் ஓய்ந்து, அமைதி நிலவும் சூழ்நிலையில் முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு, தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பகுதிக்குட்பட்ட பெருமுறிப்பு சவாரத்துவெளி, காதர் மீரான்குளம், தண்ணிமுறிப்பு குடியேற்றக்காணிகளை மீண்டும் பாரம்பரிய தமிழ், முஸ்லிம் உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நீதியமைச்சரும் ‘ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
-
ஏறாவூர் நகர சபை செலவறிக்கைகள் பற்றி விசாரிக்க உள்ளக விசாரணைக் குழு நியமிப்பு
ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: ஏறாவூர் நகர சபை செலவறிக்கைகள் பற்றி விசாரிக்க உள்ளக விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக நகரபிதா அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார். ஏறாவூர் நகர சபையின் 37 வது சபை அமர்வு நகர சபையின் தவிசாளர் அலிஸாஹிர் மௌலானா தலைமையில் நேற்று வியாழக்கிழமை (10.04.2014) ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
-
நோய் விசாரிக்கச் செல்லும் பொழுது – சில ஆலோசனைகள்
முஹம்மது சுக்ரி நோய் விசாரிக்கச் செல்வதற்கு இஸ்லாம் அதிக அவதானத்தையும் ஊக்கத்தையும் வழங்குகின்றது. நபி(ஸல்) கூறினார்கள் ஒரு முஸ்லிம் தம் சகோதரரை காலையில் உடல் நலம் விசாரித்தால், அன்று மாலை வரை அவருக்காக எழுபதாயிரம் மலக்குகள் துஆச் செய்வார்கள். அவரை மாலையில் உடல் நலம் விசாரித்தால், மறுநாள் காலை வரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். அறிவிப்பாளர் : அலி(ரலி), ஆதாரம் : திர்மிதி.
-
பொது மக்களுக்கு டெங்கு நோய் தொடர்பாக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் விடுக்கும் அவசர அறிவித்தல் துண்டுப்பிரசுரம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொது மக்களுக்கு டெங்கு நோய் தொடர்பாக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அவசர அறிவித்தல் துண்டுப்பிரசுரம் இரண்டை வெளியிட்டுள்ளனர். அந்த துண்டுப்பிரசுரம் பொது மக்கள் பார்வைக்காக பதிவேற்றம் செய்யப்படுகின்றது.