Category: Your Kattankudy
-
விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் காட்சி
இர்ஷாத் றஹ்மத்துல்லா புதுக்குடியிருப்பு: விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு தரப்பினரால் மீட்கப்பட்ட யுத்த தளபாடங்கள் தற்போது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுகள், படகுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த தினங்களில் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் கட்டாயமாக பார்வையிடும் ஒரு நுாதனசாலையாக மாறியுள்ளது. அங்கு சென்றுள்ள உள்ளுர் பயணிகள் அதனை பார்வையிடுவதையும் இங்கு காணலாம்.
-
தென்கொரியாவில் கப்பல் விபத்து: 300க்கும் மேற்பட்டோர் மாயம்
– SHM சியோல்: தென் கொரியாவில் 459 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று மூழ்கி விபத்துக்குள்ளானதில் 2 பேரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 300க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான கப்பலில் பள்ளி மாணவர்கள் 325 பேர் இருந்தனர்.
-
கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பேறு பெற்ற ஊடகவியலாளரின் புதல்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் பி .எச்.பியசேன பாராட்டு
பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை கார்மல் பாத்திமா தேசிய பாடசாலை மாணவியும், ஊடகவியலாளர் யு. முகம்மட் இஸ்ஹாக்கின் மூத்த புதல்வியுமான எம்.ஐ. பர்ஹத் பர்ஹானா சமீபத்தில் வெளியான கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார்.
-
மாணவர்களுக்கான வழிகாட்டற் கருத்தரங்கு
அஸ்மி தாஜூதீன் (மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், காத்தான்குடி) காத்தான்குடி: இலங்கை ஜமாஅதே இஸ்லாமி காத்தான்குடி மன்றத்தின் அனுசரணையுடன் காத்தான்குடி பிரதேச செயலக தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு 14-04-2014 காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:00 வரை காத்தான்குடி பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
-
சவால்களுக்கு மத்தியிலான பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி
ரைஸ் கிண்ணியா: பெரியதொரு இடைவெளி தாண்டி வெகுவிமர்சையாக இடம்பெற்ற கிண்ணியா பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று வெகுவிமர்சையாக இடம்பெற்றது. பேரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலை அதிபர் முகம்மது தலைமையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி பாடசாலையின் புதிய நிகழ்வாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-
‘இஸ்லாத்தை முறிப்பவை’ என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு
கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 17-04-2014 வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
மட்டக்களப்பு படுவான்கரை மக்களுக்கு நீண்டகாலம் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்த மண்முணைப்பாலம் பூர்த்தி – ஜனாதிபதி 19ஆம் திகதி மாலை திறந்து வைப்பார்
பழுலுல்லாஹ் பர்ஹான் மண்முனை: நீண்ட காலமாக சுமார் 2 இலட்சம் படுவான்கரை பிரதேச மக்களின் போக்குவரத்திற்கு மிக இடைஞ்சலாக இருந்து வந்த மண்முனைத்துறை புதிய பாலத்தின் நிர்மாணப்பணிகள் முற்றாக நிறைவு பெற்றுள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 19ஆம் திகதி மாலை 4 மணியளவில் இப்பாலத்தை உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கவுள்ளார்.
-
ஜீப் வண்டி விபத்து : குழந்தை பலி
இர்ஷாத் றஹ்மத்துல்லா ஆனமடுவ: ஆனமடுவ – பள்ளம வீதி வென்தகடுவே பிரதேசத்தில் ஜீப் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் குழந்தையொன்று பலியானதுடன் மேலும் 9 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இன்று (15) மாலை 7.00 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
-
அனுப்பப்படட நீர்மூழ்கிக் கப்பலுக்கும் எந்த தடயங்ளும் கிடைக்கவில்லை!
– S-90 பேர்த்: இந்திய பெருங்கடலில் மாயமான விமானத்தை தேட கடலின் தரை பரப்புக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் நீரின் ஆழம் அதிகமாக இருந்ததால் பாதியிலேயே தேடலை முடித்துக் கொண்டு திரும்பிவிட்டது. கடந்த மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா கிளம்பிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாக மலேசியா அறிவித்தது. இதையடுத்து விமானத்தை கடலில் தேடும் பணி 38 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. முதலில் கடலில்…
-
கிரிக்கட் ஆடும் கேம்ப்ரிட்ஜ் ராணி கேட்
– SHM ஓக்லாந்த்: நியூசிலாந்துக்கு அண்மையில் விஜயம் செய்த பிரித்தானிய அரச பரம்பரைக்குரிய இளவரசர் வில்லியம்ஸ், கேட் வில்லயம்ஸ் ஆகியோருக்கு நியூசிலாந்து மக்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓர் நிகழ்வில் கலந்துகொள்வதற்குச் சென்ற கேம்ப்ரிட்ஜ் ராணி கேட் வில்லியம்ஸ் தனது பெருமதிமிக்க ஆடையுடனும், உயர் காலணியுடனும் கிரிக்கட் விளையாடியது உலகை ஈர்த்துள்ளது.
-
மலேசிய விமானத்தை தேடி ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்
SHMகோலாலம்பூர்: மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியை கடல் தரை பரப்பில் தேட ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியின் ஆயுள் முடிந்துவிட்டது. இதையடுத்து அதில் இருந்து வந்த சிக்னல்களும் அடங்கிவிட்டன. இதனால் நீருக்கு அடியில் சென்று கருப்புப் பெட்டியை தேட முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
பொது பல சேனா அராஜகங்கள் தொடர்பில் அமைச்சர்களான டிலான் பெரோரா, வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ள கருத்துக்கள் காலத்தின் தராசில் மிகவும் வளுவுள்ளதாக காணப்படுகின்றது
இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இலங்கையில் பொது பல சேனாவினால் மேற்கொள்ளப்படும் அராஜகங்கள் தொடர்பில் பல்வேறு தரப்புக்களின் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான டிலான் பெரோரா மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்கள் காலத்தின் தராசில் மிகவும் வளுவுள்ளதாக காணப்படுகின்றது.முஸ்லிம்களுக்காக முஸ்லிம் அமைச்சர்கள் குரல் கொடுத்தால் அல்லது அறிக்கைவிட்டால் அவர்களை இனவாதிகளாக காண்பித்து அதிலிருந்து தேவையற்ற விடயங்களை தொட்டுக் கொண்டும், தொங்கிப் பிடித்துக் கொண்டும் பேசும் நபர்கள் ஏராளம்.