‘புதிய நோயால்’ வாழ்க்கையை இழந்து தவிக்கும் இளைஞர்கள்

aa1– S-90

இன்றைய விரைந்து ஓடும் காலகட்டத்தில் எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றது ஒரு புது வியாதி. குறிப்பாக இளைஞர்களைத் தாக்கும் இவ்வியாதி கிட்டதட்ட அவர்களை அழிவுப்பாதையிலேயே தள்ளி விட்டு விடுகின்றது.

உடலில் ஏற்படும் நோய்க்கு கூட மருந்து உண்டு. ஆனால், ‘டிப்ரஷன்’ என்று அழைக்கப்படும் இம்மனச்சிதைவு நோய்க்கு மருந்து இருந்தாலும் அது பலனளிப்பதில்லை.

மாறிவரும் கால கட்டத்தில் வாழ்க்கை என்பது இளைஞர்களைப் பொறுத்தவரை காதல் பூக்கும் உலகம், பணம் காய்க்கும் தொழில், நாகரிக அரக்கன் என்றவைகளை மட்டுமே கொண்ட ஒன்றாக நினைக்க வைத்துள்ளது.

ஆனால், அந்த அளவுகடந்த ஆசைகளில் எல்லைமீறிப்போய் அவர்கள் செய்யும் சில காரியங்கள்தான் அவர்களுடைய வாழ்க்கையையே அழித்து விடுகின்றது. பெற்றவர்களின் அன்பெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை.

அவர்களைப் பொறுத்தவரையில் கைநிறைய சம்பளம் வாங்கும் நான் ஏன் பெற்றோரை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுகின்றது. அதில் எல்லை மீறிப் போய், காதல் படுகுழியில் விழுந்து, வாழ்க்கையின் தாத்பரியங்கள் புரியாமல் எல்லாவற்றையும் இழந்து கடைசியில் ‘டிப்ரஷன்’ என்ற காலனுக்குள் சிக்கி காணாமலே போய் விடுகின்றனர்.

சரி அப்படி ஒன்று, இரண்டு பேர் தங்களின் நிலை புரிந்து, பாலின வேறுபாடுகளைக் கடந்து நல்ல நட்புடன் இருந்தாலும் மற்றவர்கள் விடுவதில்லை. நண்பனுக்கு உதவி செய்கின்றேன் என்ற பெயரில் அவர்களின் மனதை தூண்டி தவறான விசயங்களை விதைத்து விடுகின்றார்கள்.

விளைவு எல்லாவற்றையும் இழந்து, மனச்சிதைவுக்கு உள்ளாகி, சரியான முடிவு எடுக்க முடியாமல் வாழ்க்கையையே தொலைத்து விடுகின்றனர்.

குடும்ப சூழல், கூட்டுக்குடும்பம் என்ற முடிச்சுகள் நம்மை கட்டிப்போடுவதற்காக ஏற்படுத்தப்பட்டதல்ல. நம்முடைய வாழ்க்கை எப்போதும் தறிகெட்டு போய்விடக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட சொர்க்கங்கள் அவை. வாழ்க்கை முழுதும் நமக்காக அர்ப்பணித்த பெற்றோருக்கு கண்டிப்பாக நமக்கு எது நல்லது என்பதையும் தெரிய வைக்க முடியும்.

காதலித்து காதல் கசக்கும். சிலவேளை அதே காதல் இணிக்கும். காதல் இணிப்பில் ஈர்க்கப்பட்ட எறும்புகளாக காதலர்கள் பெற்றோரை, குடும்பத்தை துறந்து திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று, சந்தோசமாக வாழ்ந்தாலும், நாளடைவில் தான் பிறந்து வளரர்ந்த மண்ணைத் தேடியும், தன்னைப் பெற்று வளரத்த அண்ணையைத் தேடியும் மற்றும் சொந்த பந்தங்களைத் தேடியும் ஒரு நாள் வரத்தான் வேண்டும்.

இதைவிடவும் வேதனை தன்பெற்றோரை ஒதுக்கிச் சென்று வாழ்ந்து, பின்னர் தன் பெற்றோரின் மரணச் செய்தி கேட்டு, ஓடி வந்து அழுது ஒப்பாரி வைப்பது. இவ்வாரான செயற்பாடுகள் தினமும் சமுதாயத்தில் நடந்து வருகின்றன. கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போல்தான் இத்தகைய செயற்பாடுகள் இத்தகைய இளைஞர்களால் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, இளைஞர்கள் இதுபோன்ற சிக்கல்களில் சிக்கி, சிதைந்து தற்கொலை முடிவிற்கு போகும் நிலைமையை தடுக்க ஒரே வழி குடும்பத்தினர் காட்டும் பரஸ்பர பாசம் மற்றும் அன்பால் மட்டும்தான் முடியும். வாழ்க்கையை புரிந்து அவர்களுடைய எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் இம்மனச்சிதை நோய்க்கு ஒரே மருந்தாகும்.

Published by

Leave a comment