(மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், காத்தான்குடி)
காத்தான்குடி பிரதேச செயலக தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு இலங்கை
காத்தான்குடி: ஜமாஅத்தே இஸ்லாமி காத்தான்குடி மன்ற அனுசரணையுடன் இன்ஷா அல்லாஹ் க.பொ. த சா/தரம் எழுதி விட்டு இஸ்லாமிய உயர் கல்வி வாய்ப்புக்களை எதிர் பார்த்திருக்கும் ஆண் மாணவர்களுக்கான இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனங்களான ஜாமீயா நளீமியா, மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கல்லூரி, பெண் மாணவிகளுக்கான மாவனெல்லை ஆயிஷா சித்தீக்கியா அரபுக் கல்லூரி ஆகியவற்றிக்கு உள்ளீர்ப்பதை ஊக்குவிக்குமுகமாக முன்னோடி வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று காத்தானன்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கீழ் வரும் விபரப்படி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்பதை அறியத்தருகின்றேன்.
ஈருலக கல்வியினை கற்பதன் மூலமே சிறந்த விழுமியங்களையுடைய இளைஞர் சமுதாயத்தினை உருவாக்கமுடியும் என்ற அடிப்படையில் ஆர்வமுள்ளவர்கள் இந் நிகழ்வில் தவறாது கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றோம்.
காலம்:
14.04.2014 திங்கள்கிழமை
நேரம்:
• காலை 9.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை பெண்களுக்கும்
• 10.00 மணி தொடக்கம் 12.00 மணிவரைஆண்களுக்கும் நடைபெறும்
இடம்:
பிரதேச செயலக கேட்போர்கூடம், பிரதேச செயலாளர் காரியாலயம்,
காத்தான்குடி
பதிவுகளுக்கு:
077 9351818 , 0772365189 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு,
பிரதேச செயலாளர் காரியாலயம்,
காத்தான்குடி.
Published by

Leave a comment