முப்படைகளோடு சேர்த்து குரங்குகள் படையையும் உருவாக்கியது சீனா

monkey– SHM

பெய்ஜிங்: தரைப்படை, கப்பல்படை, விமானப் படையை பார்த்திருப்பீங்க.கேள்விப்பட்டிருப்பீங்க.. ‘குரங்குகள்படை’யை கேள்விப்பட்டிருக்கீங்களா? சீனாவின் தலைநகர் பெய்ஜிங் அருகே விமானப் படையின் தளம் அமைந்துள்ளது. இந்த விமானப் படைதளத்துக்கு எதிரிநாடுகளால் இருக்கும் அச்சுறுத்தலைவிட பறவைகளால் ஏற்படும் மிரட்டல்தான் அதிகம்.

உலக நாடுகளையெல்லாம் முப்படை கொண்டு எதிர்க்கும் சீனாவின் பாச்சா சின்னஞ்சிறு பறவைகளிடத்தில் பலிக்கவே இல்லை. விமானம் தரை இறங்கும் போது, பறக்கும் போதும் பறவைகளோடு போராடுவதுதான் ஒரேவேலையாக இருந்தது.

வெடிகள் வெடித்தும், துப்பாக்கியால் சுட்டுப் பார்த்தும் பறவைகளின் தொந்தரவு அடங்குவதாக இல்லை. பிற நாடுகளை எதிர்கொள்ள எப்படியெல்லாமோ வியூகம் வகுத்து சீண்டிக் கொண்டிருக்கும் சீனாவுக்கு புதிய தலைவலியாகிப் போனது இந்த பறவைகள். இதனால் பறவைகளை எதிர்கொள்ள சீனா வகுத்த வியூகம்தான் குரங்குகள் படை

குரங்குகளை வைத்து எப்படியெல்லாம் பறவைகளை ‘ஒடுக்குவது’ என்று சீன விமானப்படையினருக்கு முதலில் பயிற்சி கொடுக்கப்பட்டது.

monkey1

இதற்காகவே விமானப்படை தளத்துக்கு குரங்குகள் கொண்டுவரப்பட்டு அவற்றுக்குள் நாள்தோறும் சில சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த குரங்குகளுக்கு முதல் எதிரி என்று சொல்லப்பட்டிருப்பது விமானப்படை விமானங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சின்னஞ்சிறிய பறவைகள்தான்.

அடுத்ததாக விமானம் புறப்படும் போதும் தரை இறங்கும் போதும் இடையூறாக வரும் பறவைகளையெல்லாம் எப்படியெல்லாம் விரட்டி அடிப்பது என்பது அடுத்த பயிற்சி பயிற்சி

மூன்றாவதாக,வதாக விமானப்படை தளத்தில் இருக்கும் பறவைகளின் கூடுகளை அழிப்பது எப்படி என்று குரங்குகளுக்கு கற்றுத்தரப்படுகிறது.

சிலவேளை எமது நாட்டின் மத்தள விமான நிலையத்திற்கும் இவ்வாறான குரங்குப்படை அமைக்கப்படலாம்?

monkey

 

Published by

Leave a comment