பீபா-2014 உலகக் கிண்ணமும், நிறைவடையாத மைதானங்களும்

fifa brazil– MJ

பிரேசிலியா: உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இன்னும் ஒரே ஒரு மாதமே இருக்கும் நிலையில், இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்தும் பிரேசிலில் மைதான வேலைகள் நிறைவுபெறாததால்,  பீபா தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றது.

எதிர்வரும் ஜூன் மாதம் 12ம் திகதி உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகள் பிரேசிலின் புகழ்பெற்ற 12 நகரங்களில் இடம்பெற இருக்கின்றன. இருந்தும், சில மைதானங்கள் உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில மைதானங்கள் மேலதிக ஆசன வசதிகளுடன் திருத்தப்பட்டு வருகின்றன.

brazil

எனினும் உலகக் கிண்ண ஆரம்பப் போட்டி இடம்பெறும் ‘எரினா டி சா போலோ’ மைதானம் இன்னும் தயார் நிலையில் அமையப் பெறாததால் பீபா உட்பட ஏனைய விளையாட்டு அதிகாரிகளும் தங்களது அதிருப்திகளை வெளியிட்டிருக்கின்றனர்.

இருந்தபோதிலும்,  ‘இன்னும் ஓரிரு வாரங்களில் சகல வேலைகளும் நிறைவடையும் எனவும், போட்டிகள் தங்கு தடையின்றி இடம்பெறும்’ எனவும் பிரேசில் பிரதமர் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார்.

brazil

fifa brazil

Published by

Leave a comment