மட்டக்களப்பு: பொலிஸ் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பிரிவிலுள்ள 12 பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் சேவையில் குற்றங்களை ஒழித்து திறமையான சேவை புரிந்த 60 பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவையுணர்வுகளைப் பாராட்டி வெகுமதிகள் மற்றும் பணப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு
09-05-2014 இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி. மெவன் சில்வா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு –அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருனாரத்ன கலந்து கொண்டார்.
இதன் போது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவினால் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பிரிவிலுள்ள 12 பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் சேவையில் குற்றங்களை ஒழித்து திறமையான சேவை புரிந்த 60 பொலிஸ் உத்தியோகத்தர்கள் வெகுமதிகள் மற்றும் பணப்பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதில் 60 பொலிஸாருக்கு 07 இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா பகிர்ந்து வழங்கப்பட்டதுடன் இதில் கூடுதல் தொகையான 158,000 ரூபாவை வாகரைப் பொலிஸ் நிலையம் பெற்றுக்கொண்டது.
இங்கு விஷேடமாக மட்டக்களப்பு கல்லடி பாலம் திறந்துவைக்கப்பட்டு சில தினங்களில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட பெண்னை தமது உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய களுத்துறை மற்றும் குருநாகல் நிகவரெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜயசிங்க பண்டாரவுக்கு ஒரு லட்சம் ரூபா பணப்பரிசும் ,ஜயந்த பண்டாரவுக்கு ஐம்பது நாயிரம் ரூபா பணப்பரிசும் சான்றிதழும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டார ஹக்மன,வாழைச்சேனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன,களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்க, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்,மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரிகள் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,மதப் பெரியார்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Published by



Leave a comment