9 ஏ சித்திபெற்ற காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் விஷேட நிகழ்வு

jiffry– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கல்வி அபிவிருத்திச் சபையினால் அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் 9 ஏ சித்திபெற்ற காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் விஷேட நிகழ்வு

09.05.2014 இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின் காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பெரிய ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரீ காலித் ஜேபி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் ஷெய்ஹூல் பலாஹ் அப்துல்லாஹ் றஹ்மாணி, சம்மேளன கல்விக் குழு தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத், காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர், பிரதேச கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.சுபைர் உட்பட சம்மேளன செயலாளர் மௌலவி அல்ஹாபிழ் எஸ்.எச்.றமீஸ் ஜமாலி , சம்மேளன கல்விக் குழு செயலாளர் எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் உட்பட ஊர் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
9a

இதன் போது காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் மாணவர்களான ஏ.என்.ஹனூத் ஹஸன், ஐ.எம்.இஸ்ஸத், ஏ.எல்.அம்ஸர் அஹமட், எம்.எப்.எம்.இன்பாஸ், எம்.ஐ.எம்.அஸாம் அலி, எம்.எல்.ஏ.ஸஜா மஹ்மூத், எஸ்.அப்துல் றகுமான், ஐ.எல்.இக்ரான் ஹூஸைன் ஆகியோரும் மீரா பாலிகா தேசிய பாடசாலையின் எம்.எப்.றிஸா பத்வின், எம்.ஜே எப்.றிஸ்மா, என்.எம்.எப்.ஸப்னா, எஸ்.எம்.எப்.நுஹா ஆகியோரும் அல்ஹிறா மகா வித்தியாலய மாணவர்களான ஏ.ஏ.அஸீர் அஹமட, எம்.ஏ.றசீட் ஹூமைபாயி, எம்.எஸ்.எம்.உஸைர், எம்.எஸ்.எம்.முஸ்தகீன் ஆகியோரும் மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தை சேர்ந்த எச்.எல்.எப்.நுஸ்ரத், எம்.ஏ.எப்.ஹன்ஸா ஆகியோரும் அல் அமீன் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஏ.எல்.பாத்திமா றிஸாதா, கலீல் றகுமான் அன்ஸிதா, ஆகியோரும் ஒல்லிக்குளம் அல் ஹம்ரா வித்தியாலயத்தை சேர்ந்த எம்.எம்.பாத்திமா மர்ஸதா மற்றும் மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த எப்.பர்ஹா மௌலானா, எப்.ஜெஸா ஜுனைதீன் ஆகியோரும் புனித மிக்கல் கல்லூரியைச் சேர்ந்த எம்.எஸ்.ஸினானுல் பத்ரி ஆகியோரும் கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த எம்.எம்.அஸ்னீ அஹமட் ஆகிய 26 மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
9a

காத்தான்கு பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கல்விக்குழு ஒவ்வொரு வருடமும் இவ்வாறு சிறப்பான சித்திபெறும் மாணவர்களை பாராட்டி கௌரவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

jiffry

Published by

Leave a comment