கொழும்பு: நாட்டினதும் ஒரு சமூகத்தினதும். வளர்ச்சி மாணவ சமூகத்திலேயே தங்கியிருக்கிறது. அண்மையில், ஊட கங்களில் வெளிவந்த சில செய்திகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது, ‘மாணவர்களை டொலர்களுக்கு பணயம் வைக்க ஒருபோதும் இட மளிக்க முடியாது’ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ‘சொந்த விருப்பு வெறுப்புக்களுக்காக மாணவச் செல்வங்களை பலியாக்க வேண்டாம்’ என்றும் அவர் வேண்டு கோள் விடுத்திருக்கிறார். இந்த நாட்டின் கண்ணியம்மிக்க தலைவர் தெரிவித்திருக்கும் இந்தக் கருத்துக்களை சாதாரண விடயமாகக் கருத முடியாது. மாணவர்களை தவறான வழியில் இட்டுச் செல்வதற்கு சில திட்டமிட்ட சக்திகள் செயற்படுகின்றன என்பதற்கு ஜனாதிபதி யினுடைய கருத்துக்கள் சான்றாக அமைகின்றன.
ஆசியாவிலேயே சிறந்த கல்விச் சமூகம் உள்ள நாடு இலங்கை. இலவசக் கல்வி மூலம் இது சாத்தியமாகியிருக்கின்றது. என்றாலும், மாணவர்களை தவறாக வழிநடத்தி இலங்கையைச் சீரழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகள் திரைமறைவில் முடுக்கி விடப்படுவது நடந்துகொண்டிருக்கிறது. பாடசாலைகளுக்கருகில் போதைப் பொருள்கள், பாபுல் போன்றவை விற்பனை செய்யப்படுவது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
இளம்பராயத்து மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் பாவ னையை ஊக்குவித்து அவர்களை மதிமயங்கச் செய்து கல்வி யைச் சீரழிப்பதே இதன் நோக்கமாக இருக்கிறது. மேலோட்டமான பார்வைக்கு இவை வியாபாரமாக நமக்குத் தென்பட்டாலும் சில சர்வதேச சதிகளும் பின்னணியில் இருக்கிற தென புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன.
இதன் உண்மை நிலையை அறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள். பாடசாலைகளை அண்டிய பிரதேசங்களில் சுற்றி வளைப்புக்களை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பும் நமக்கு ஓர் பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும். என்றாலும் நிலைமை மோசமடைந்திருக்கிறதென்ற அபாய சங்கு ஊதப்பட்டிருக்கிறதென்பதை பெற்றோர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
குருநாகல் மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றில் வகுப்புக்குள் இருந்து பாபுல் போன்ற போதைஊட்டும் பொருட்கள் கண்பிடிக் கப்பட்டிருக்கின்றன. இதேபோன்று வேறு சில மாவட்டங் களிலுள்ள பாடசாலைகளுக்கருகிலும் பாபுல் மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது பலர் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
மானிட வளர்ச்சியில் Teenage பராயம் என்று கூறப்படும் முதிர் வளர்ச்சி பருவம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அதாவது, இந்தப் பராயத்தினரை ‘பதின்ம வயதினர்’ அல்லது ‘கட்டிளம் பருவத்தினர்’ என தமிழிலே நாம் பயன்படுத்தி வருகிறோம்.
பாடசாலைகளில் பெரும்பாலும் 9 ஆம் வகுப்பிலிருந்து க. பொ.த உயர்தரம் வரை கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் 14 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டவர்களாகவே இருக் கின்றனர். இந்த வயதுடையவர்களே பதின்ம வயதினர் என்ற சமூகவியல் வரையறைக்குள் அடக்கப்படுகின்றனர்.
வாழ்க்கைப் பயணத்தில் எந்தப் பக்கம் செல்வதென திசை தடுமாறி நிற்பவர்கள் தான் இந்த இளம்பராயத்தினர். இவர்களுக்கு சரியான வழியைக் காட்டுவதுதான் நமது சமூகக் கடமையாக இருக்கவேண்டும். பிள்ளையை பெற்றோம்; வளர்த் தோம் என்றில்லாமல் சமூகக் கடைமையோடு நமது மாணவச் செல்வங்களை வழி நடத்தவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இத்தகைய பதின்ம வயதினரை தவறாக திசை திருப்ப எடுக்கப்படுகின்ற சதி முயற்சிகளில் ஒன்றே போதைப் பொருள் பாவனையாகும்.கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஏன்? கலாசார விழுமியங்களைப் பேணுவதிலும் உலகில் தலை நிமிர்ந்து நிற்பவர்கள் நாம். இவை களை நிர்மூலம் ஆக்கவே வெளிநாடுகளின் உதவியுடன் இளம்பராயத்தினரை திசை திருப்பும் சதி முயற்சிகள் நடந்துகொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
கடந்த காலங்களில் வட மாகாணத்தைப் போன்றே தென் மாகாணங்களிலும் மாணவர்கள் திசை திருப்பப்பட்ட யுகம் இருந்தது. இனிமேல் அப்படியானதொரு கரியுகம் உருவாகுவதற்கு நாம் உடந்தையாக இருந்து விடக்கூடாது. ஆகவே, சொந்த விருப்பு வெறுப்புக்களுக்காக நமது மாணவச் செல்வங்களை பலியாக்க வேண்டாம். உயர் விழுமியங்களையும் நற்பண்புகளையும் கொண்ட எதிர்கால சந்ததியை உருவாக்க இன்றைய பதின்ம வயது மாணவர்களை சரியாக வழிநடத்த திடசங்கற்பம் பூணுவோம்.
– தினகரன்
Published by



Leave a comment