தீவிரவாதிகளின் எச்சரிக்கைகளையும் மீறி நவாஸ் ஷெரீப்பின் இந்திய பயணம்

nawaz– SHM

லாஹூர்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்திய பயணம் மேற்கொள்வதற்கு ஜாமாத் உத் தவா, லஷ்கர், தொய்பா ஆகிய தீவிரவாத அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளன.டெல்லியில் 26-ந் தேதி நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

இந்நிலையில் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான வீடியோவில் பேசியுள்ள ஜமா உத் தவாவின் தலைவரும் மும்பை தாக்குதல் குற்றவாளியுமான ஹபீஸ் சயீத், மோடியின் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்றால், நீங்கள் எப்படி காஷ்மீரி மக்களுக்கு உங்கள் பதிலை அளிப்பீர்கள்? காஷ்மீரி மக்கள் ஷரீப்பின் இந்திய பயணத்தால் அதிருப்தி அடைந்துள்ளனர் என்றார்.

இதேபோல் லஷ்கர், தொய்பா அமைப்பின் தலைவரும் இந்தியாவுடன் நல்லுறவு பாராட்டுவதற்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார். காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படாமல், அவர்களுடன் வர்த்தக உறவோ, நட்புறவோ எந்த ஒப்பந்தமோ போடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

ஏற்கெனவே பாகிஸ்தான் ராணுவம், நவாஸ் ஷெரீப்பின் இந்திய பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தீவிரவாத இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது அந்நாட்டில் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Published by

Leave a comment