ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டி இன்று

Ronaldo_1769144a[1]– MJ

லிஸ்பன்: 2013-2014ம் ஆண்டிற்கான ஐரோப்பிய கழகங்களின் சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டி இன்று 24-05-2014 இரவு 7:45 (இலங்கை நேரப்படி நள்ளிரவு 12:15) மணிக்கு, போர்த்துக்கள் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகரத்தின் ‘ஸ்டேடியோ டா லுஸ்’ மைதானத்தில் கோலாகளமாக இடம்பெறுகின்றது.

இறுதிப்போட்டிக்கு ரியல் மட்ரிட் மற்றும் அட்லாடிகோ மெட்ரிட் ஆகிய ஸ்பைன் நாட்டின் முன்னணி இரண்டு கழங்களும் தகுதி பெற்றிருக்கின்றன.

ஐரோப்பியக் கிண்ண வரலாற்றில் அதிகூடிய ஒன்பது தடவைகள் ரியல் மெட்ரிட் ஐரோப்பியாவின் சம்பியனாக வெற்றி பெற்றிருக்கின்றது. ஆனால், அட்லாடிகோ மெட்ரிட்,ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ணத்தை இதுவரைக்கும் வெற்றிபெறவில்லை.

எனினும், இவ்வருட ஸ்பைன் நாட்டின் லாலிகா சம்பியனான அட்லாடிகோ மெட்ரிட் இக்கிண்ணத்தைக் கைப்பற்றலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும், பலம் பொருந்திய ரியல் மெட்ரிட் 10 வது முறையாக இக்கிண்ணத்தை வென்று ஐரோப்பிய வரலாற்றில் மீண்டும் எந்த அணியும் பெறாத சாதனையை நிகழ்த்தக் காத்திருக்கின்றது.

லிஸ்பன் மைதானம் 65,647 பார்வையாளர்களை கொள்ளலாவாகக் கொண்டது. போர்த்துக்களின் மிகச் சிறந்த உதைப்பந்தாட் மைதானங்களில் இதுவும் ஒன்று.

ரியல் மெட்ரிட் சார்பாக உலக முன்னணி வீரர்கள் விளையாடினாலும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓர் தனிச்சிறப்பைப் பெறுகிறார். இறுதியாக 2002ல் ரியல் மெட்ரிட் ஐரோப்பிய சம்பியன் கிண்ணத்தை வெற்றிபெற்றிருந்தது. பிரான்ஸ் அணியின் தலைவராகவும் ரியல் மெட்ரிட் அணியின் தலைவராகவும் இருந்த உலகின் சிறந்த உதைப்பந்தாட்ட வீரரான ஸைன்டீன் சிடான் தலைமையில் இக்கிண்ணத்தை இறுதியாக ரியல் மெட்ரிட் வெற்றிபெற்றிருந்தது.

costa

அட்லாடிகோ மெட்ரிட் சார்பாகவும் பல முன்னணி சர்வதேச வீரர்கள் விளையாடுகின்றனர். எனினும் பிரேசில் நாட்டின் இளம் வீரர் டீகோ கோஸ்டா பிரபல்யம் பெற்ற வீரர். இன்று உலகில் எதிர்பார்க்கப்படும் வீரர்களுள் இவரும் ஒருவர்.

ஸ்பைன் அணிகளில் ஓர் அணியே இவ் ஐரோப்பிய சம்பியனாக இன்றிரவு முடிசூடிக்கொள்ளும்.

இப்போட்டியை இன்றிரவு உலகின் 200 நாடுகளிலிருந்து 300மில்லியன் மக்கள் நேரடியாகப் பார்வையிடுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Ronaldo_1769144a[1]

Published by

Leave a comment