கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி வயோதிபர் பலி: வடமுனையில் சம்பவம்

???????????????????????????????– ஏறாவூர் அபூ பயாஸ்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட இகிரான் பிரதேச செயலகபிரிவுக்குள் உள்ள வெலிகந்த பிரதேசத்துக்கு அருகாமையிலுள்ள வடமுனை பிரதேசத்தில் வசித்து வரும், வதனக்குட்டி சின்னப்பிள்ளை கங்காணம் (வயது -64) என்பவர் நேற்று மாலை கட்டிட இடிபாடுகளுக்குள் சடலமாக கிடப்பதை உறவினர்கள் கண்டுள்ளனர்.

சென்ற புதன்கிழமையன்று மாலை வீட்டிலிருந்து சென்ற இவர்,இரவாகியும் வீடு வராததால் மறுநாள் வியாழக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இவர் காணமல் போன விடயமாக உறவினர்களால் முறைப்பாடு பதிவாகியுள்ளது.
பல்வேறு இடங்களிலும் தேடிய உறவினரக்ள் ,நேற்று சனிக்கிழமை மாலை , முன்னர் வடமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அமைந்திருந்த பாவனைக்குதவாத கட்டிட இடிபாடுகளுக்குள் இவரது சடலம் கிடப்பதை அவதானித்துள்ளனர்.

உடனடியாக பகுதி கிராமசேவையாளர் திரு ஆர்.அச்சுதனுக்கு தொலைபேசிமூலம் கிராம மக்கள் அறிவித்து வாழைச்சேனை பொலிஸாருக்கும் தகவலை கிராமசேவையாளர் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்கள்.

???????????????????????????????

சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு இன்று காலை பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் அவர்களோடு சென்ற வாழைச்சேனை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்திய வீட்டு திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற வீட்டை கட்டி முடிக்க தேவையான கம்பியை இப் பழைய கட்டிடத்திலிருந்து கழட்டி எடுக்க தனியாக முயற்சித்த போது சுவர் இடிந்து இவர்மேல் விழுந்ததால்தான் மரணமாகியுள்ளார் என உறவினர்கள் தெரிவித்தனர்.

கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்த முதியவரின் சடலத்தை வெளியில் எடுத்த போது இஇவரது உடல் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டது.

???????????????????????????????

‘கட்டிடத்தின் சுவர் இவர் மேல் விழுந்ததால் தலையும், நெஞ்சும் பலமாக பாதிக்கப்பட்டு மூலையும், இதயமும் சிதைவுற்றதால் மரணம் சம்பவித்துள்ளது ‘என தீர்ப்பளித்த மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் ,சடலத்தை மனைவி விஸ்வலிங்கம் அருளம்மாவிடம் ஒப்படைக்க பொலிசாரை பணித்தார்.

Published by

Leave a comment