ஏறாவூர்-சவுக்கடி கடலில் பிடிபட்ட இராட்சத திருக்கை

fishஏறாவூர்: சவுக்கடி கடலிலிருந்து சுமார் 1000 கிலோ கிராம் நிறையுடைய இராட்சத கொம்புத்திருக்கை மீன் ஒன்று இன்று சனிக்கிழமை பிடிபட்டுள்ளது. இந்த இராட்சத திருக்கை, சண்முகம் வடிவேல் என்ற மீனவரின் வலையில் சிக்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

குறித்த மீனானது ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு கடல் பிரதேசத்தில் இவ்வாறான இராட்சத மீன்கள் பிடிபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

fish

Published by

Leave a comment