10வது தடவையாக ஐரோப்பாவின் சம்பியனானது ரியல் மட்ரிட்

uefa– MJ

லிஸ்பன்: போர்துக்கள், லிஸ்பன் மைதானத்தில்  அடிதடிக்கும், அதிரடிக்குமிடையில் மிகச் சிறப்பாக சற்று முன்னர் இடம்பெற்று நிறைவடைந்த ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் ஸ்பெய்ன் நாட்டின் ரியல் மெட்ரிட் அணி, 4:1 எனும் கோல் அடிப்படையில் அபார வெற்றிபெற்று 10வது தடவையாக ஐரோப்பாவின் சம்பியனானது.

ஸ்பெய்ன் நாட்டின் மற்றைய அணியான அட்லடிகோ மெட்ரிட் இறுதிவரை சிறப்பாக விளையாடியது. முதல் 90 நிமிடங்கள் 1:1 வரை போட்டி நிறைவடைந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. மேலதிக நேரத்தின் முதல் 15 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதனையும் போடவில்லை. எனினும் மேலதிக நேரத்தின் இரண்டாவது பகுதியில் மார்சலோ, பலே மற்றும் ரொனால்டோ ஆகியோர் தொடர்ந்து 3 கோல்களை பெற்றுக்கொடுத்து ரியல் மெட்ரிட் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

போட்டி ஆரம்பம் தொடக்கம் இறுதிவரை விறுவிறுப்பாகச் சென்றது. இடையிடையே கைலப்புக்களும், தகாத வார்த்தைப் பிரயோகங்களும் இருதரப்பினருக்குமிடையே இடம்பெற்று வந்தன.

இவ்வெற்றியுடன், ஐரோப்பாக் கிண்ண சம்பியன்ஸ் கிண்ணத்தை பத்தாவது தடவையாக வெற்றிபெறும் ஒரே ஒரு ஐரோப்பா கழகமாக ரியல் மெட்ரிட் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment