ஓட்டமாவடி: இலங்கை வங்கியின் 75வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இலங்கை வங்கியில் பணியாற்றி ஓய்வூதியம் பெறும் ஊழியர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இலங்கை வங்கி ஓட்டமாவடி கிளையின் முகாமையாளர் பிரான்சிஸ் திருச்செல்வம் தலைமையில் (19.08.2014) நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வங்கி கட்டிடத்தில் நடைபெற்றது.
இவ்வைபவத்தின் போது மிகுந்த அர்பணிப்புடன் மக்கள் சேவைக்காக தம்மை அர்பணித்து கடமையாற்றிய ஓய்வு பெற்ற ஊழியர்களான திரு வீ.பாலேந்திரா, வீ.மனோகரன், என்.யோகேஸ்வரன், ஏ.சிவயோகராசா ஆகியோர் வங்கி முகாமையாளர் உள்ளிட்ட ஊழியர்களால் மாலை அணிவித்து அவர்களின் சேவை குறிப்புக்களை கூறி வாழ்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
Published by


Leave a comment