இஸ்ரேல்-பலஸ்தீன் தரப்புக்கிடையில் சமாதானப் பேச்சுவார்த்தை எட்டாக்கணி: இஸ்ரேலின் தாக்குதல் தொடரலாம்!

israel– MJ

கெய்ரோ: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கிடையில் கடந்த 5 நாட்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த போர்நிறுத்தம் உள்ளுர் நேரப்படி இன்றிரவு 9 மணிக்கு நிறைவடைந்தது. இன்று திங்கட்கிழமை எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இஸ்ரேல்-பலஸ்தீன் இருதரப்புக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றி அளிக்கவில்லை என கெய்ரோவின் செய்திகள் தெரிவிக்கின்றன.

நிறைவடைந்த இருதரப்பு சமரசப்பேச்சுக்களுக்கிடையே பாரிய இடைவெளிகள் இருந்ததாகவும், புரிந்துணர்வுகளும், விட்டுக்கொடுப்புக்களும் சாதகமாக அமையவில்லை எனவும் மேலும் தெரிவிக்கிறது.

2000 இற்கும் அதிகமான பலஸ்தீன் மக்களைக் கொன்றொழித்த இஸ்ரேல், ஹமாஸின் அடிப்படை நிபந்தனைகளை ஏற்பதற்கு தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த 5 நாட்களாகத் தொடர்ந்த இருதரப்பு போர்நிறுத்தம் தற்பொழுது நிறைவடைந்திருக்கும் நிலையிலும், பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத தருணத்திலும், நாளைய பொழுதின் விடியலை அச்சத்துடன் எதிர்பார்த்திருக்கின்றனர் காஸா மக்கள்!

Published by

Leave a comment