Category: Your Kattankudy
-
ஏறாவூரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் இருப்பதால் முன்கூட்டியே ஏறாவூர் பொதுச் சுகாதார பணிமனையும், ஏறாவூர் பொலிசாரும் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஏறாவுரின் பல பகுதிகளிலும் இன்று மேற்கொண்டனர்.
-
கட்டாரில் ‘சுவன மாளிகை’ என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி (28-08-2014) வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
இஸிஸ் அமைப்புக்கு எதிரான போர்: அமெரிக்காவுடன் கைகோர்க்கும் 7 நாடுகள்!
– SHM பக்தாத்: ஈராக் மற்றும் சிரியாவில் உள்நாட்டுப் போரை நடத்தி வரும் இஸிஸ் இயக்கத்துக்கு எதிரான யுத்தத்தில் குதிக்க அமெரிக்காவுடன் 7 நாடுகள் கை கோர்த்துள்ளன. ஈராக், சிரியாவில் சுன்னி முஸ்லிம்கள் வாழும் பகுதிகளை ஆயுதப் போரின் மூலம் கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசமாக பிரகடனம் செய்துள்ளது இஸிஸ்.
-
காத்தான்குடியில் குரங்குகளை சுட்டுக் கொல்லத் திட்டம்
காத்தான்குடி: வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து தொல்லை கொடுக்கும் குரங்குகளை சுட்டுத்தள்ள அரசிடம் துப்பாக்கியை கேட்டுள்ளது காத்தான்குடி நகரசபை. இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் நாளாந்தம் அதிகரித்து வரும் இத்தொல்லையை கட்டுப்படுத்த குரங்குகளை சுடுவதற்கு காத்தான்குடி நகர சபை தீர்மானித்துள்ளது.
-
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிவாரணப் பணிகள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இலங்கையில் அண்மைக்காலமாக இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பல்வேறு நடவடிக்கைகள் தீய சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும்.
-
யாழ்.துரையப்பா விளையாட்டரங்கு புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாட்டப்பட்டது
– பழுலுல்லாஹ் பர்ஹான் யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. துரையப்பா விளையாட்டரங்கில் மேற்படி அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் (27) இடம்பெற்றது.
-
உஷ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் ‘நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றைய முஸ்லிம் சமூகம்’ எனும் தலைப்பில் விஷேட மார்க்க சொற்பொழிவு காத்தான்குடியில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றம் நடாத்தும் விஷேட மார்க்க சொற்பொழிவு எதிர்வரும் 29-08-2014 வெள்ளிக்கிழமை இஷாத் தொழுகையின் பின் 8 மணிக்கு காத்தான்குடி -03 முஹியித்தீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெறும்.
-
‘எமது சிடி கெம்பஸ் தகவல் தொழிநுட்பத்தில் பாரிய மாற்றங்களைத் தோற்றுவிக்கும்’
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: ‘தகவல் தொழிநுட்பத் துறையில் (IT) 400 க்கு மேற்பட்ட மாணவர்கள் எமது அல் மனார் சிடி கெம்பஸில் கற்கின்றமை இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் பாரிய மாற்றத்தினை உண்டுபண்ணும்’ இவ்வாறு காத்தான்குடி அல்மனார் அறிவியியற் கல்லூரியின் பணிப்பாளர் எம்.எஸ் எம்.நௌசாத் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
-
கேன் அமெரிக்கன் பல்கலைக்கழகம் இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கேன் அமெரிக்கன் பல்கலைக்கழகம் (Girne American University) இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் மெற்றொபொலிடென் கல்லூரியுடன் ஒப்பந்தம் ஒன்றை அண்மையில் கைச்சாத்திட்டது.
-
கவிஞர் மதியன்பனின் ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு’ கவிதை நூல் வெளியீட்டு விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகத்தின் வெளியீடான கவிஞர் மதியன்பனின் ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு ‘கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 29-08-2014 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு காத்தான்குடி அல் மனார் அறிவியற் கல்லூரி அர்ராசித் கேட்போர் கூடத்தில் பன்னூலாசிரியர், கலாபூசணம் எம்.எம்.எம்.மஹ்றூப் கரீம் தலைமையில் இடம்பெறும்.