காங்கேயனோடை: சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய பஸ் சேவை ஆரம்பம்

bus– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்

காங்கேயனோடை: நாளை இடம்பெறவுள்ள நாட்டின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடி இ.போ.ச. சாலையினால் கொக்கட்டிச்சோலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையிலான புதிய பஸ் சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

காத்தான்குடியை அடுத்துள்ள காங்கேயனோடை கிராமத்தில் சமூக, கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மீஸான் ஸ்ரீலங்கா அமைப்பினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமையவே இந்த புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவ்வமைப்பின் செயலாளர் ஏ.எஸ். சமீம் தெரிவித்தார்.

bus

நாளை காலை 06:30 மணிக்கு காங்கேயனோடை மஸ்ஜிதுல் மினன் பள்ளிவாசல் முன்றலில் இருந்து ஆரம்பமாகும் இந்த புதிய பஸ்சேவை, காத்தான்குடி பழைய கல்முனை வீதி (ஊர் வீதி) வழியாகவே சேவையில் ஈடுபடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலை, மண்முனை, ஒல்லிக்குளம், பாத்திமா புரம், மாவிலங்கதுறை, ஆரையம்பதி, காங்கேயனோடை, காத்தான்குடி (ஊர்வீதி), பூநொச்சிமுனை, நாவற்குடா வழியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை சென்றடையும் இந்த பஸ்சேவை மீண்டும் எதிர்வழியாக கொக்கட்டிச் சோலையைச் சென்றடையும்.

Published by

Leave a comment