PMGG மற்றும் NFGG இணைந்து நடாத்தும் சுதந்திர தின விழா

PMGG-Logo[1]காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் இணைந்து நடாத்தவுள்ள இலங்கையின் 67வது சுதந்திர தின விழா நிகழ்வுகள் நாளை (04.02.2015) புதன்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு காத்தான்குடியில் நடைபெறும்.

காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள மேற்படி அமைப்புக்களின் தலைமையகத்தில் நடைபெறும் இந்நிகழ்வுகளில் ஊர்ப்பிரமுகர்களும், அரச, திணைக்கள, கூட்டுத்தாபனங்களின் முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் பொதுமக்களையும் உரிய நேரத்திற்கு கலந்து கொண்டுசிறப்பிக்குமாறு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் செயலாளர் ஜனாப். எஸ்.எம். பஸீர் ஆசிரியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்)

Published by

Leave a comment