புதிய காத்தான்குடியில் வீதியை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Farm-Road-Aarppaattam-2– எம்.எச்.எம்.அன்வர், புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்

காத்தான்குடி: புதிய காத்தான்குடி பரீட் நகரிலுள்ள மஸ்ஜிதுல் மனாறுல் ஹூதா பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று (03.02.2015) காலை பெருந்திரளான பொதுமக்கள் ஒன்று கூடி வீதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த வீதியையும், மேலும் இப்பிரதேசத்திலுள்ள பல வீதிகளையும் அபிவிருத்தி செய்வதற்கு 110.6 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 20.12.2014ல் இப்பள்ளிவாசலில் இடம்பெற்ற மக்கள் கருத்தரங்கில் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்திருந்ததுடன், தற்போது மழைக்காலமாக இருப்பதால் மழை நின்று வீதியிலுள்ள வெள்ளம் வடிந்ததும் உடனடியாக இவ்வீதி அபிவிருத்திப் பணிகள் தொடங்கும் எனவும் வாக்குறுதியளித்திருந்தார்.

shibly

எனினும் சுமார் இரண்டு மாதகாலமாக இவ்வீதி அபிவிருத்திப் பணிகள் தொடங்கப்படாமல் இருப்பது குறித்து அப்பிரதேச மக்களும், பள்ளிவாயல் நிர்வாகத்தினரும் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவைத் தொடர்பு கொண்டு வினவியபோது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இவ்வபிவிருத்திப் பணிகளுக்கு தடையாக இருப்பதாகத் தெரிவித்தார்.

Farm-Road-Aarppaattam-2

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் இக்குற்றச்சாட்டை முற்றாக மறுத்திருந்தார்.

இதனையடுத்தே குறித்த இரண்டு அரசியல் முக்கியஸ்தர்களையும் ஒன்றாக தமது பிரதேசத்திற்கு வந்து இதுதொடர்பான உண்மை நிலையினையும், ஒதுக்கப்பட்ட பணத்திற்கு என்ன நடந்துள்ளது என்பது பற்றியும் பகிரங்கமாக மக்கள் மன்றத்தில் தெரிவிக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

Farm-Road-Aarppaattam-1

இதன்போது காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என். முபீன், இந்நாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் போன்றவர்கள் மக்கள் மன்றத்தில் சமூகமளித்து தத்தமது தரப்பு விளக்கங்களைத் தெரிவித்தனர்.

rahuman

எனினும் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இம்மக்கள் மன்றத்திற்கு சமூகமளிக்காததன் காரணமாக இவ்விவகாரத்தை காத்தான்குடியிலுள்ள சம்மேளனம் மற்றும் சமூக நிறுவனங்கள் மத்தியில் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாகவும், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சரைச் சந்தித்து ஒதுக்கப்பட்ட 110.6 மில்லியன் ரூபா நிதி தொடர்பில் கலந்துரையாடுவதென்றும் இறுதியில் தீர்மானிக்கப்பட்டது.

Published by

Leave a comment