காத்தான்குடி வரியிறுப்பாளர் சங்கத்தின் ஒன்று கூடல் நாளை கடற்கரை முன்றலில் நடைபெறும்

mahroof kareem– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்

காத்தான்குடி: காத்தான்குடி நகர சபைப் பிரிவிலுள்ள குடியிருப்பு ஆதனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் போன்றவற்றிற்கு முன்னெப்போதும் இல்லாத அளவு இவ்வருடம் சோலை வரி பலமடங்கு அதிகரிக்கப்பட்டு நகர சபையினால் அறவிடப்பட்டு வருவது தொடர்பாக வரியிறுப்பாளர்கள் தமது விசனத்தையும், ஆட்சேபனைகளையும் பரவலாகத் தெரிவித்து வருவதாக காத்தான்குடி

வரியிறுப்பாளர் சங்கத்தின் ஆயுட்காலத் தலைவரும், முன்னாள் காதி நீதிபதியுமான அல்ஹாஜ் எம்.எம்.எம். மஹ்றூப் கரீம் தெரிவித்தார்.

mahroof kareem
எம்.எம்.எம். மஹ்றூப் கரீம் MA

இதுதொடர்பாக வரியிறுப்பாளர்களுடனான சந்திப்பு ஒன்றை நாளை (04.02.2015) புதன்கிழமை மாலை 04:30 மணிக்கு காத்தான்குடி கடற்கரை வீதி சென்றடையும் கடற்கரை முன்றலில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இச்சந்திப்புக்கு காத்தான்குடி மற்றும் புதிய காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள சகல வரியிறுப்பாளர்களையும் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை வெளிப்படுத்தி உரிய தீர்வைப் பெறுவதற்கு ஒத்துழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published by

Leave a comment