ஒரு மாத காலமாக திருத்தப்படாதுள்ள வடிகான் மூடி

Beach-Rd.-Vadikan-Moodi-1காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை வீதியிலிருந்து முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் வீதிக்குத் திரும்பும் சந்தியிலுள்ள வடிகான் மூடியொன்று உடைந்து, சுமார் ஒரு மாத காலமாக சீரமைக்கப்படாமல் பொதுமக்களால் அபாய அறிவிப்பு அடையாளம் காட்டப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கு அருகிலும் வடிகானுக்குரிய மூடிகள் இடப்படாமல் உள்ளன.

இதனால் இவ்வீதியினைப் பயன்படுத்தும் பொதுமக்கள், வாகனச் சொந்தக்காரர்கள், இந்த வடிகானுக்கு எதிரில் வீதியின் மறுபுறம் அமைந்துள்ள அல்அமீன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவிகள், ஆசிரியர்கள் போன்றோர் பெரிதும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

Beach-Rd.-Vadikan-Moodi-1

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலும் காலதாமதம் செய்யாமல் உடைந்த நிலையிலுள்ள இவ்வடிகான் மூடியைச் சீரமைப்பதுடன் இதுவரை போடப்படாதுள்ள வடிகான் மூடிகளையும் இட்டு பொதுமக்களின் அசளகரியத்திற்கு தீர்வு காண்பார்களா?

Beach-Rd.-Vadikan-Moodi-2

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்)

Published by

Leave a comment