Category: Your Kattankudy
-
ஜம்இய்யதுந் நிஸா பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்த பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஜம்இய்யதுந் நிஸா பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்த பெண்களுக்கான விஷேட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்வு 28.02.2015 நேற்று சனிக்கிழமை புதிய காத்தான்குடி–06, ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நடைபெற்றது.
-
‘இன்றுள்ள பாடங்களும் இனியுள்ள கடமைகளும்’ எனும் கருப்பொருளுடன் ஜமாத் இஸ்லாமியின் இஜ்திமா
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் ஓட்டமாவடி: இலங்கை ஜமாத் இஸ்லாமின் ஓட்டமாவடி மன்றத்தினால் ‘இன்றுள்ள பாடங்களும் இனியுள்ள கடமைகளும்’ எனும் கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆண்கள், பெண்களுக்கான இஜ்திமா நேற்று சனிக்கிழமை ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலிலும், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகாவித்தியாலைய பெண்கள் பாடசாலையின் கேட்போர் கூடத்திலும் இடம்பெற்றது.
-
காத்தான்குடி அல்குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் பரிசளிப்பு விழா
டீன் பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி அல்குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் 28 வது வருட பரிசளிப்பு விழாவின் 3 வது நாள் நிகழ்வு (28.02.2015) சனிக்கிழமை காலை 09.00 புதிய காத்தான்குடி நூராணியா ஜூம்ஆ பள்ளிவாயலில் அதன் தலைவர் பீ.எம். பாயிஸ் தலைமையில் நடை பெற்றது.
-
அமைச்சர் றிசாத் பதியுதீன் மன்னார் மாவட்ட பிரதேச மக்கள் சந்திப்பு
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் மன்னார்: மன்னார் மாவட்டத்தின் விடத்தல்தீவு, சன்னார், பெரியமடு, காயா நகர், மினுக்கன், சௌர்னபுரி, பள்ளிவாசல்பிட்டி பிரதேசங்களில் வாழும் மக்களின் தேவைப்பாடுகள் குறித்து கண்டறியும் வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் (2015-02-28) விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
-
காத்தான்குடி பிரிவு செஞ்சிலுவைச் சங்கத்தின் வலயங்களுக்காக இடம்பெற்ற பொதுக் கூட்டம்
எம்.ஏ.எம்.அல்தாப் காத்தான்குடி: அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் வலய தலைவர் எம். எச். எம். அன்வர் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வுக்கு காத்தான்குடி பிரிவு தலைவர் எம்.எஸ்.எம். அப்துள்ளா, செயலாளர் ஏ. எம். சுல்மி கலந்துகொண்டனர்.
-
கவனிப்பாரற்றுக் கிடந்த சம்மாந்துறை பழைய சந்தை புனர்தாபனம்
சம்மாந்துறை அஸ்மல் ஜஃபர் சம்மாந்துறை: மிக நீண்ட காலமாக கவனிப்பாரற்றுக் கிடந்த சம்மாந்துறை பழைய சந்தை பொதுமக்கள் குப்பை கொட்டும் இடமாகவும், டெங்கு போன்ற தோற்று நோய்கள் பரவக்கூடிய இடமாகவும் காணப்பட்டது.
-
மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் 2014 வருடாந்த ஒன்று கூடல்
பழுலுல்லாஹ் பர்ஹான் கிரான்குளம்: மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் 2014 வருடாந்த ஒன்று கூடல் 28-02-2015 சனிக்கிழமை மட்டக்களப்பு, கிரான்குளம் சீ மூன் காடன் ஹோட்டலில் இடம்பெற்றது.
-
மன்னார் மாவட்ட யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு
இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: வடக்கில் நலிவுற்றிருக்கும் யுவதிகளின் வாழ்வாதார மேம்பாட்டுகளுக்காக எமது அமைச்சின் கீழ் இலவச தையல் பயிற்சிகளை வழங்குவதாக தெரிவித்துள்ள கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இவ்வாறான பயிற்சிகளை கற்பதற்கு பெறும் தொகை பணத்தினை செலவழித்து செல்வதை காணமுடிவதாகவும் கூறினார்.
-
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானம்
வெலிங்டன்: உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் 22 வது போட்டியில், இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இன்று போட்டியிடவுள்ளன. நியூசிலாந்தின் வெலிங்டன் மைதானத்தில் இன்னும் சற்று நிமிடத்தில் இப்போட்டி ஆரம்பமாக இருக்கிறது.
-
இனி கணிதப் பாடம் அவசியம் இல்லை: கல்வி அமைச்சர்
கொழும்பு: கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு இறால் கொண்டு செல்ல முற்பட்ட நபர் கைது
கொழும்பு: இலங்கையிலிருந்து மலேசியாவிற்கு சட்டவிரோதமான முறையில் இறால் கொண்டு செல்ல முற்பட்ட நபரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 16 இலட்சத்து 95 ஆயிரத்து 790 ரூபா பெறுமதியான இறாலினை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
-
பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ரணிலுக்கு இல்லை: ஜாதிக ஹெல உறுமய
பத்தரமுல்லை: பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இல்லை என்று தெரிவித்துள்ள ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இன்னும் நிறைவேற்று அதிகாரத்தை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.