சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு இறால் கொண்டு செல்ல முற்பட்ட நபர் கைது

arrestகொழும்பு: இலங்கையிலிருந்து மலேசியாவிற்கு சட்டவிரோதமான முறையில் இறால் கொண்டு செல்ல முற்பட்ட நபரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 16 இலட்சத்து 95 ஆயிரத்து 790 ரூபா பெறுமதியான இறாலினை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

விமான நிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by

Leave a comment