கவனிப்பாரற்றுக் கிடந்த சம்மாந்துறை பழைய சந்தை புனர்தாபனம்

unnamedசம்மாந்துறை அஸ்மல் ஜஃபர்

சம்மாந்துறை: மிக நீண்ட காலமாக கவனிப்பாரற்றுக் கிடந்த சம்மாந்துறை பழைய சந்தை பொதுமக்கள் குப்பை கொட்டும் இடமாகவும், டெங்கு போன்ற தோற்று நோய்கள் பரவக்கூடிய இடமாகவும் காணப்பட்டது.

இவ்விடம் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைக்குச் சொந்தமானதாகையால் இப்பிரதேச மக்கள் சார்பாக ACAM. புஹாரி மௌலவி தலைமையில் இயங்கிவரும் ‘பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பிரசித்திபெற்ற பொதுச் சந்தையை புனர்தாபனம் செய்யும் குழுவினர் இவ்விடத்தை துப்பரவு செய்து அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தை சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

இதை கருத்திற்கொண்டு இவ்விடத்தை துப்பரவு செய்வதுடன் ஒரு கலாசார நிலையம் மற்றும் மக்தப் மத்ராஸா என்பவற்றை அமைக்கும் நோக்கத்தில் முதற்கட்டமாக ரூபாய் 5 லட்சம் நம்பிக்கையாளர் சபையால் நிதி ஒதுக்கப்பட்டதாக நம்பிக்கையாளர் சபையின் பொதுச் செயலாளர் அல் ஹாஜ் MM. ஸலீம் JP தெரிவித்தார்.  

unnamed1

unnamed

Published by

Leave a comment