காத்தான்குடி: காத்தான்குடி அல்குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் 28 வது வருட பரிசளிப்பு விழாவின் 3 வது நாள் நிகழ்வு (28.02.2015) சனிக்கிழமை காலை 09.00 புதிய காத்தான்குடி நூராணியா ஜூம்ஆ பள்ளிவாயலில் அதன் தலைவர் பீ.எம். பாயிஸ் தலைமையில் நடை பெற்றது.
அல்குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர் மௌலவி எச்.எம். ஸாஜஹான் பலாஹி இன் நெறிப்படுத்தலுடன் நடைபெற்ற மேற்படி நிகழ்வினில் சங்கத்தின் உறுப்பினர்களான முன்னால் காழி நீதிபதி எம்.ரீ.எம். காலித் ஜே.பீ (பொருளாளர்), எஸ்.எல்.ஏ. கபூர் (B Com) (செயலாளர்), எம். உசனார் (B A), பீ.ரீ.எம். பாறூக் J P உட்பட உலமாக்கள், பள்ளிவாயல்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வின்போது சுமார் 205 மாணவ, மாணவிகளுக்கு நற்சாண்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Published by

Leave a comment