Category: Your Kattankudy
-
காத்தான்குடி மீடியா போரத்தின் புதிய தலைவருக்கு கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் வாழ்த்து
– கிழக்கு ஊடக சங்கம் காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்தின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இளம் ஊடகவியலாளர் டீன் பைரூஸ், ஆளுமைமிக்க ஒரு இளம் தலைவராக செயற்பட்டு அங்கத்தவர்களை அரவணைத்துச் செயற்படுவார் என்ற நம்பிக்கையோடு அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைவதாக கிக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
மஞ்சந்தொடுவாய் அமீரலி வித்தியாலய 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு NFGG கல்வி உதவி
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: மஞ்சந்தொடுவாய் அமீரலி வித்தியாலயத்தில் கற்கும் இம்முறை 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) முன்னோடி பரீட்சை வினாத்தாள்களை வழங்கியது. நடைபெறவிருக்கும் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அதற்கான ஊக்குவிப்பு வழங்கும் வகையில் மேற்படி வினாத்தாள்கள் வழங்கி வைக்கப்பட்டன.
-
ஊழல் மோசடி குறித்த இஸ்லாமியப் பார்வை: வரியிருப்பாளர்களின் ஒவ்வொரு ரூபாயும் அமானிதமாகும்
– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: வரியிருப்பாளர்களின் ஒவ்வொரு ரூபாயும் அமானிதமாகும், இன மத மொழி பேதமின்றி இறைவரித் திணைக்களத்தினூடாக பொருட்கள் பண்டங்கள் சேவைகளுக்காகவும், மற்றும் இன்னோரன்ன அரச சேவைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தீர்வைகள் உற்பட சேகரிக்கப்படும் மக்களது வரிப்பணம் சகலதும் அமானிதமாகும்.
-
29 இல் பாராளுமன்றம் கலைப்பு?
கொழும்பு: எதிர்வரும் 29 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 19வது திருத்தச் சட்டம் நாளை 27 ஆம் திகதி வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாளை மறுதினம் 28ம் திகதி சட்டமூலம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்படும். அப்போது அது தோற்கடிக்கப்பட்டால் அன்றைய தினமே பாராளுமன்றத்தை கலைத்துவிடும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
நேபால் பூகம்பம்: கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1400ஆக அதிகரிப்பு!
– MJ கட்மாண்டு: நேற்று நேப்பால் கட்மாண்டு நகர் பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தல் இதுவரைக்கும் 1400 பேர் பலியாகி இருப்பதாக அவசர மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து இன்னும் உயிருடன் இருப்போரையும், மரணித்தோரையும் மீட்டெடுக்கும் பணி தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும்,
-
“இறையில்லமான பள்ளிவாயல்களின் தொடர்பை நாம் அதிகரித்தக் கொள்ள வேண்டும்” ஹிஸ்புல்லா
– ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: புதிய காத்தான்குடி நூராணிய ஜம்ஆ பள்ளிவாயலின் மிக நீண்ட கால தேவையாக இருந்த மின்பிரப்பாக்கி (ஜெனரேட்டர்) முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் பள்ளிவாயல் நிர்வாகிகளிடம் கையளிக்கும் நிகழ்வு (25.04.2015 சனிக்கிழமை) தலைவர் பீ.எம்.பாயிஸ் தலைமையில் நடைபெற்றது.
-
வன்னி வாழ் முஸ்லிம்கைளை அங்கிருந்து வெளியேற்ற சதிகாரர்கள் கூட்டாக நடவடிக்கை: இதற்கு தளம் அமைக்கின்றாரா முன்னாள் ஜனாதிபதி ?
– அபூ அஸ்ஜத் வன்னி: இந்த நாட்டு சிறுபான்மை மக்களால் புறக்கணிக்கபட்ட நிலையில் இந்த மக்களையும்,இந்த மக்களின் அரசியல் தலைமைகளையும் பழிதீர்க்க துடிக்கும் ஒரு செயற்பாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்ய ஆரம்பித்துள்ளது இந்த நாட்டில் இன்னும் இனவாதிகள் இருக்கின்றார்கள் என்பதை புடம் போட்டுகாட்டும் ஒன்றாகவுள்ளது.
-
இலவச மலேரியா இரத்தப் பரிசோதனை முகாம்
– பழுலுல்லாஹ் பர்ஹான், ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: சர்வதேச மலேரியா ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மலேரியா அற்ற இலங்கையை உருவாக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திட்கு அமைவாக KKYXPRESS சமூக ஊடக வலையமைப்பு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் மலேரியா தடுப்பு பிரிவுடன் இணைந்து இலவச மலேரியா இரத்தப் பரிசோதனை மற்றும் வெளிநாடு செல்வோருக்கான மலேரியா தடுப்பு மருந்து வழங்கல் முகாம் ஒன்றினை 24.04.2015 வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்து நடாத்தியது.
-
ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தினால் -வீடு வசதியில்லாத 10 குடும்பங்களுக்கு பூநொச்சிமுனை பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள் கையளிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு வசதியில்லாத வறிய குடும்பங்களுக்கு சவூதி அரேபிய நாட்டு அரசின் நிதி உதவியுடன் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தினால் மட்டக்களப்பு பூநொச்சிமுனை பிரதேசத்தில் 40 வீடுகளை கொண்ட வீட்டுத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுவருகின்ற நிலையில் அதில் பூர்த்தியான 10 வீடுகள் முதற்கட்டமாக அதன் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
-
சிறப்பாக இடம்பெற்ற காத்தான்குடி மீடியா போர பொதுச்சபைக்கூட்டம்
எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்தின் 16வது வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் அதன் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா பலாஹி தலைமையில் இன்று காத்தான்குடியில் இடம்பெற்றது.
-
BCAS மட்டு. வளாக மாணவர் பேரவையின் ஏற்பாட்டில் நாளை நடைபெறும் இரத்தான முகாம்
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் மட்டக்களப்பு: இலங்கையின் முன்னணி தனியார் உயர்கல்வி நிறுவனமான BCAS கல்வியகத்தின் மட்டக்களப்பு வளாக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் இரத்ததான முகாம், நாளை 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரில் காலை 09:00 மணிக்கு இடம்பெறுகின்றது.