காத்தான்குடி: புதிய காத்தான்குடி நூராணிய ஜம்ஆ பள்ளிவாயலின் மிக நீண்ட கால தேவையாக இருந்த மின்பிரப்பாக்கி (ஜெனரேட்டர்) முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் பள்ளிவாயல் நிர்வாகிகளிடம் கையளிக்கும் நிகழ்வு (25.04.2015 சனிக்கிழமை) தலைவர் பீ.எம்.பாயிஸ் தலைமையில் நடைபெற்றது.
புதிய காத்தான்குடி நூராணிய ஜம்ஆ பளளிவாயல் நிர்வாகிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று சுமார் 500000/-பெறுமதியான சவுன்ட் புறூப் மின்பிரப்பாக்கி ஒன்றினை நிர்வாகிகளிடம் ஒப்படைத்த பின் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, இந்த ஜெனரேட்டரை நான் பள்ளிவாயலுக்கு வந்து உத்திய பூர்வமாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உங்களின் வேண்டு கோளுக்கிணங்கவே நான் இங்கு வர நேர்ந்ததாக தெரிவித்தார்.
அல்லாஹ்வின் இல்லமாகிய பள்ளிவாயலோடு அதிகம் தொடர்புடையவர்களாக நாம் இருக்கவேண்டும் எமது பணிகளைக் கூட நாம் இறை திருப்தியை மாத்திரம் நாடியே செய்ய வேண்டும் எனத்தெரிவித்தார்.
நிகழ்வின் போது உலமாக்கள்,பள்ளிவாயல் நிர்வாகிகள், மதரசா மாணவர்கள்,ஜமாஅத்தார் என பலரும் கலந்து கொண்டனர்.
Published by




Leave a comment