– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
காத்தான்குடி: மஞ்சந்தொடுவாய் அமீரலி வித்தியாலயத்தில் கற்கும் இம்முறை 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) முன்னோடி பரீட்சை வினாத்தாள்களை வழங்கியது. நடைபெறவிருக்கும் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அதற்கான ஊக்குவிப்பு வழங்கும் வகையில் மேற்படி வினாத்தாள்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி வினாத்தாள்களின் முதலாவது தொகுதி வழங்கும் நிகழ்வு நேற்று (253.04.2015) சனிக்கிழமை மாலை மஞ்சந்தொடுவாய் அமீரலி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் முஹம்மத் கான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MAHM.மிஹ்ழார், NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான், NFGGயின் காத்தான்குடி செயற்குழு உறுப்பினர் வித்யாகீர்த்தி MM.அமீர் அலி ஆசிரியர், பாடசாலை STC உறுப்பினர் MIM.ஹக்கீம் உட்பட பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மேற்படி முன்னோடி வினாத்தாள் முதலாவது தொகுதி NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் அவர்களினால் வகுப்புக்குப் பொறுப்பான ஆசிரியை அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.
Published by



Leave a comment