மட்டக்களப்பு: இலங்கையின் முன்னணி தனியார் உயர்கல்வி நிறுவனமான BCAS கல்வியகத்தின் மட்டக்களப்பு வளாக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் இரத்ததான முகாம், நாளை 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரில் காலை 09:00 மணிக்கு இடம்பெறுகின்றது.
தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல்வேறு குரூப் வகைகளினதும் இரத்தத்திற்கு பற்றாக்குறை நிலவுவதால் தமது மாணவர் பேரவை இந்த அவசர ஏற்பாட்டினைச் செய்துள்ளதாக மட்டக்களப்பு BCAS Batti. Campus முகாமையாளர் எஸ்.எச் மிர்ஷான் தெரிவித்தார்.
இந்த இரத்ததான முகாமில் BCAS மட்டு. வளாகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் உட்பட அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் உட்பட சகலரையும் பங்கேற்று, தானத்தில் மிகச்சிறந்த இரத்ததானம் வழங்குவதன் மூலமாக இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்பான வைத்திய சேவையினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வழங்கி வருகின்ற வைத்தியர்கள், தாதியர் மற்றும் ஊழியர்களின் உன்னதமிக்க சேவையுடன் அனைவரும் இணைந்து பங்களிப்புச் செய்வதற்கு முன்வருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலதிக விபரங்களுக்கும், தமது பங்களிப்பை உறுதிப்படுத்தவும் 0774163460 என்ற தமது இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
Published by

Leave a comment