Category: Your Kattankudy
-
பெண்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்
– எச்.எம். பாத்திமா ஷா்மிலா மட்டக்களப்பு: பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் என்பன இடம்பெற்றன. அனர்த்தத்திற்கு எதிரான பெண்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம் மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் மணிக்கூட்டுக்கோபுர முன்றலில் இடம் பெற்றது.
-
நல்லாட்சி அரசுக்கு அழகல்ல
கொழும்பு: இலங்கையில் நல்லாட்சியொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒரு பகுதிமக்கள் அகதி வாழ்வு வாழ்வது நட்டுக்கு அழகல்ல எனவே வடக்கிலிருந்து 1990 ஆம் ஆண்டுகளில் பலவந்தமாக வெ ளியேற்றப்பட்ட மக்களை சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவேண்டும்.
-
பொதுத் தேர்தல் களத்தில் மீண்டும் இனவாத சக்திகள் தலை தூக்கும் சாத்தியப்பாடுகள்
– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: பதவியிழந்த அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை மீண்டும் அரசியல் அரங்கிற்கு கொண்டுவர முனையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முக்கியஸ்தர்களிடம் ஜனாதிபதி மைத்ரி அவர்கள் தனது முடிவை தெளிவாக கூறிவிட்டதன் பின்னர் அரசியல் கள நிலவரங்கள் சூடு பிடித்துள்ளன.
-
“தமிழ் சமூகத்தின் தலைமைகளுக்குக் கிடைக்கும் மரியாதை தமக்குக் கிடைப்பதில்லை என முஸ்லிம் அரசியல்வாதிகள் இப்போது ஒப்பாரி வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்”
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: “தமிழ் சமூகத்தின் தலைமைகளுக்குக் கிடைக்கும் மரியாதை தமக்குக் கிடைப்பதில்லை என முஸ்லிம் அரசியல்வாதிகள் இப்போது ஒப்பாரி வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் தலைமைத்துவத்தை போலன்றி, முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களின் ஆணையைப் பதவிகளுக்காகவும் தமது கொந்துராத்து வியாபாரங்களுக்காகவும் பயன்படுத்தியதே, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு மரியாதை இல்லாமல் போனதற்கான அடிப்படைக் காரணமாகும்”
-
யாழ். நூலகம் தீக்கிரை: இன்று 34வது வருட நினைவு
கொழும்பு: யாழ். பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தின் 34 வருட நினைவு தினம் இன்றாகும். தெற்காசியாவின் பெரும் கல்விச் சொத்தாக விளங்கிய யாழ். நூலகம் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் (ஜூன் முதலாம் திகதி) திட்டமிட்ட முறையில் தீக்கிரையாக்கப்பட்டது.
-
பொரளை பள்ளிவாசல் கல்வீச்சு: விரிவான விசாரணைகள் ஆரம்பம்
கொழும்பு: பொரளை பள்ளிவாசல் மீது நடத்தப் பட்ட கல்லெறி தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.இச் சம்பவம் சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கல்லெறி தாக்குதலினால் பள்ளிவாசலின் முன்புறமாகவுள்ள நான்கு கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
-
இலங்கையரின் 13100 கோடி ரூபா வெளிநாட்டு வங்கிகளில் வைப்பு
கொழும்பு: வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள இலங்கையரின் பணத்தை இலங்கையில் வைப்பிலிடுவ தாயின் அவற்றுக்கு அதிக வட்டியையும், பாதுகாப்பையும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதிகவட்டி வீதத்தைப் பெறமுடியும் என்ற நோக்குடன் இலங்கையர் வெளிநாட்டு வங்கிகளில் தமது பணத்தை வைப்பு செய்துள்ளனர்.
-
“2800 கோடி ரூபாவுக்கு நடந்தது என்ன? மஹிந்த பதிலளிக்க வேண்டும்”
கொழும்பு: தனது பொறுப்பிலிருந்த பெருந்தெருக்கள் அமைச்சின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 28 வீதிகளை நிர்மாணிப்பதற்காக தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து பெற்றுக்கொண்ட 5500 கோடி ரூபாவில் 2100 கோடியை மாத்திரமே செலவுசெய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
-
இலங்கையில் பேரினவாதம் மேலும் தலைதூக்கும் அச்சுறுத்தல்: மக்கள் மிக அவதானம்!
– ஏ.அப்துல் ஹமீட் கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது சகோதரர்களின் அனுசரணையுடன் இந்நாட்டில் மீண்டும் ஓர் பாரிய இனக்கலவரத்தை ஏற்படுத்த சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. பர்மாவில் தற்பொழுது ஏற்பட்டுள்ள முஸ்லிம்கள் மீதான உச்ச கட்ட தாக்குதல்களின் மறுபளிப்பு, இலங்கை பேரினவாதிகளுக்குத் தீனி போட்டுள்ளன.
-
ரோஹிங்க்யா மறக்கப்பட்ட மக்கள் எனும் விஷேட விழிப்புணர்வுக் கருத்தரங்கு காத்தான்குடியில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மியன்மார் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக சமூக வலைத் தளங்களில் பல பிழையான செய்திகளும் தொடர்பில்லாத புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றன.
-
அவர்கள் அடிமையானது, அவர்கள் குற்றம் மட்டுமல்ல..
– ஆர். இஸ்ஸதுன்னிஸா, மருத்துவபீடம் – கிழக்குப் பல்கலைக்கழகம் உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று. சாதி இன மத பேதங்களைக் கடந்து அனைவரும் சமத்துவமாய் அணுகும் பிரதான விடயங்களுள் ஒன்று புகைத்தல், மது, போதை மருந்துப் பாவனை. இன்றைய சமூகத்தின் அவலங்களுள் ஒன்று நாம் சாதகமான விடயங்களிற்காக ஒன்றிக்க மறந்து சமூக சீரழிவுக்குரிய விடயங்களில் ஒன்றித்துக் கிடப்பது. எல்லா மதங்களையும் விட்டு மிகத் தூரம் சென்றுவிட்டது போதை இன்று.