இலங்கையரின் 13100 கோடி ரூபா வெளிநாட்டு வங்கிகளில் வைப்பு

raviகொழும்பு: வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள இலங்கையரின் பணத்தை இலங்கையில் வைப்பிலிடுவ தாயின் அவற்றுக்கு அதிக வட்டியையும், பாதுகாப்பையும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதிகவட்டி வீதத்தைப் பெறமுடியும் என்ற நோக்குடன் இலங்கையர் வெளிநாட்டு வங்கிகளில் தமது பணத்தை வைப்பு செய்துள்ளனர்.

இலங்கையில் ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடை ந்ததன் காரணமாகவும், டொலருக்கு கூடுதலான விலை கிடைக்கும் என்பதாலும் வெளிநாட்டு வங்கிகளில் டொலர்களாக வைப்பு செய்துள்ள பணத்தை இலங்கை வங்கிகளிடம் வைப்புசெய்யுமாறு தான் தயவாகக் கேட்டுக்கொள்வதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இதன்படி 13100 கோடி ரூபாவுக்கும் (10 பில்லியன் அமெரிக்க டொலர்) அதிகமான பணத்தை இலங்கைக்கு கொண்டுவர முடியும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் இறையாண்மை முறி மற்றும் இலங்கை அபிவிருத்தி முறி ஊடாக அந்நிய செலாவணி இலங்கைக்குள் வருவதற்கு வழிவகைகள் செய்யப் பட்டுள்ளன. அவற்றைக் கொள்முதல் செய்து எமது நாட்டின் அபிவிருத்திக்கு கைகொடுக்க இலங்கை மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதே அரசின் கொள்கை என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெளிவுபடுத்தினார்.

வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு அதிக வட்டி செலுத்துவதைவிட எமது நாட்டில் ஏற்றுமதியாளர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் அமைச்சர் ரவி தெரிவித்தார்.

இலங்கை ஏற்றுமதியாளர்கள் தமக்குக் கிடைக்கின்ற வெளிநாட்டுப் பணத்தை இலங்கைக்குள் கொண்டுவருவதற்கு விருப்பம் தெரிவிக்காமை ஒரு சாதகமான நிலைமை அல்ல. எனவே நாம் முடிந்தவரை அந்தப் பணத்தை எமது நாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். நாட்டின் அபிவிருத்திக்காக அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

இதற்காக அவர்களுக்கு உச்ச நம்பிக்கையையும் பாதுகாப்பையும் நாம் செய்துகொடுக்க வேண்டும். இலங்கைக்கு வெளிநாட்டுப் பணத்தை அனுப்புபவர்களுக்கு அதிக வட்டியையும் உச்ச பாதுகாப்பையும் வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி செயற்படும் என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

Published by

Leave a comment