இலங்கையில் பேரினவாதம் மேலும் தலைதூக்கும் அச்சுறுத்தல்: மக்கள் மிக அவதானம்!

mahinda– ஏ.அப்துல் ஹமீட்

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது சகோதரர்களின் அனுசரணையுடன் இந்நாட்டில் மீண்டும் ஓர் பாரிய இனக்கலவரத்தை ஏற்படுத்த சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. பர்மாவில் தற்பொழுது ஏற்பட்டுள்ள முஸ்லிம்கள் மீதான உச்ச கட்ட தாக்குதல்களின் மறுபளிப்பு, இலங்கை பேரினவாதிகளுக்குத் தீனி போட்டுள்ளன.

முகநூலில் பரவிவரும் முஸ்லிம்களின் உயிர், உடமை எரிப்பு, அகதி, முகாம் வாழ்க்கை என்பன இலங்கை பேரினவாதிகளின் வாய்களில் சீனி மெல்லக் கிடைத்திருப்பதை உணர முடிகிறது.

வடக்கில் தமிழர்களும், கிழக்கில் முஸ்லிம்களும் மஹிந்தவைத் தோற்கடிக்க பிரதானமான வாக்காளர்களாக இருந்தபோதிலும், இலங்கையில் ஏனைய இடங்களில் பரவிவாழும் இரு சிறுபான்மை இனத்தவர்களினது வாக்குகளினாலேயே மஹிந்த அன் கொம்பனி ஊழல் மிக்க அரச சிம்மாசனத்தில் இருந்து அகற்றப்பட்டது.

mahinda gota

இலங்கை மக்களிடமிருந்தும், வெளிநாட்டு நிதிகளின் மூலமும் கொள்ளையடிக்கப்பட்ட பணங்களையும் சுருட்டிவைத்துக்கொண்டு, சில தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அவற்றில் பல பில்லியன்களைக் கொடுத்து, தனது காலடியில் வைத்துக்கொண்டே கடந்த அரசாங்கத்தால் தம்புள்ளையிலிருந்து அழுத்கமைவரை தங்களது காடைத்தனத்தைக் காட்ட முடிந்தது.

மகிந்த சென்றதுடன், மரணத்தறுவாய்வரைக்கும் சென்றுள்ள இத்தகைய மகிந்த விசுவாச அரசியல்வாதிகள், மகிந்தவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அதிகப்பிரயத்தனம் எடுத்துவருகின்றனர்.

வடக்கு மக்களின் பிரதான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள தற்போதய நல்லாட்சியை, வடக்கைக் குழப்பி, வாக்கு வங்கியைத் திசை திருப்ப எடுக்கப்படும் நடவடிக்கைகள் அங்கு தினம் தினம் நடந்து வருகின்றன.

மறைத்துவைத்துள்ள கொள்ளயைடிக்கப்பட்ட மக்களின் மற்றும் அபிவிருத்திக்கான பில்லியன் பெறுமதியான பணங்களை மகிந்த அரசு, தற்பொழுது எவ்வழியிலாவது மீண்டும் செலவழித்து ஆட்சிபீடம் ஏற அதிகப்பிரயத்தனம் எடுத்துவருகிறது.

இதற்காக முஸ்லிம் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் கதவு திறந்து காத்திருக்கின்றனர்.

தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களுக்குள் பேரினவாத விளையாட்டை மேற்கொண்டு, நல்லாட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, தான் இழந்த அந்த 4 இலட்சம் வாக்குகளையாவது பெற்றுக்கொள்ள மகிந்த அன் கொம்பனி காத்திருக்கின்றது.

aluthgama

எனவே, மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தங்களது வாக்குரிமையை எவ்வாறு பயன்படுத்தி பேரினவாதத்தைத் தூண்டிய அரசாங்கத்தைக் கவிழ்த்தார்களோ, அதே படிப்பினையை மகிந்த கம்பனிக்கு மீண்டும் வழங்கி, இலங்கை சிறுபான்மையினரும் இந்நாட்டின் மக்கள் என்பதை நிரூபித்துக்காட்ட வேண்டும். அதுவரை பொறுமையாக இருப்போம்.

Published by

Leave a comment