யாழ். நூலகம் தீக்கிரை: இன்று 34வது வருட நினைவு

jaffna libraryகொழும்பு: யாழ். பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தின் 34 வருட நினைவு தினம் இன்றாகும். தெற்காசியாவின் பெரும் கல்விச் சொத்தாக விளங்கிய யாழ். நூலகம் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் (ஜூன் முதலாம் திகதி) திட்டமிட்ட முறையில் தீக்கிரையாக்கப்பட்டது.

உலகில் எங்குமே கிடைக்காத அரியநூல்கள், சுவடிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான ஏடுகள் பெரும் பொக்கிஷங்களாக யாழ். நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன. அனைத்துமே தீயில் சாம்பலாகிப் போனது மாத்திரமன்றி, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான வன்முறையின் உச்ச சம்பவமாக யாழ். நூலக எரிப்பு சம்பவம் சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றிருந்தது.

jaffna library

Published by

Leave a comment