Category: Your Kattankudy
-
மஸ்ஜிதுர் றஹ்மா பள்ளிவாயல் திறந்து
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சவூதி அரேபிய நாட்டு பிரமுகரின் நிதி உதவியுடன் ஒலுவில் பாலமுனை ஜம்மியதுஸ் சஹ்வா அல் கைரிய்யா அமைப்பின் அணுசரனையில் காத்தான்குடி -06ம் குறிச்சி பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுர் றஹ்மா பள்ளிவாயல் திறப்பு விழா 31-05-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை ளுஹர் தொழுகை நேரத்தில் இடம்பெற்றது.
-
காத்தான்குடியில் இடம்பெற்ற NFGG மக்கள் சந்திப்பு
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு ஒன்று நேற்று (3.05.2015) காத்தான்குடி குட்வின் சாந்தியில் இடம்பெற்றது. நல்லாட்சிக்கான பிராந்திய சூறாசபை உறுப்பினர் வித்தியாகீர்த்தி MM.அமீரலி ஆசிரியர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இம்மக்கள் சந்திப்பில் சமகால அரசியல் விடயங்கள், ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான நிலைப்பாடுகள் மற்றும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பங்குபற்றுதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
-
NFGGயுடனான நேரடிக் கலந்துரையாடலுக்கு புவி. றஹ்மதுழ்ழாஹ் வேண்டுகோள்
காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கடந்த காலச் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ள, விமர்சனங்களைக் கொண்டுள்ளவர்கள் தம்முடன் நேரடியாகக் கலந்துரையாடி தமது அதிருப்திகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பில் உரிய தெளிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
-
யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பதிவுகளை மேற்கொண்டுள்ள மக்களுக்கான பொது அறிவித்தல்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி யாழ்: வீடமைப்பு அமைச்சின் நிதியின் கீழ் வீடுகளைத் திருத்தியமைப்பதற்காக குடும்பமொன்றுக்கு 100,000.00 ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள உதவித்திட்டம் தற்போது பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைப்பதற்கு விஷேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
-
செய்தி ஒன்றுக்காக ஊடகவியலாளரைக் கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டா?
– புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்தில் பிராந்திய பத்திரிகை ஒன்றில் பிரசுரமான செய்தி தொடர்பில் விசாரணைக்குட்பட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர், விடுதலை செய்யப்பட்டார். போதுமான குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக இல்லை என்றும், செய்தி ஒன்றுக்காக ஊடகவியலாளர் ஒருவரைக் கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டா? இல்லையா? என்பது தொடர்பில் கேள்வி எழுவதாகவும் தெரிவித்து பருத்தித்துறை நீதவான் எம். கணேசராஜா அவரை விடுதலை செய்தார்.
-
“காத்தான்குடி சம்மேளனம் அரசியல்வாதிகளின் காலடியில் சிக்கிக்கிடக்கிறது”: (காணொளி)
– முகம்மட் சஜி காத்தான்குடி: காத்தான்குடி சம்மேளனம் அரசியல்வாதிகளின் காலடியில் சிக்கிக் கிடப்பதாக NFGG தேசிய அமைப்பாளர் MBM. பிர்தௌஸ் (நழிமி) குற்றம் சாட்டியுள்ளார். அதே “சம்மேளனத்தில் செயலாளராக சபீல் (நழிமி) இருப்பது இவருடைய கண்களுக்கு தெரியவில்லயா?” என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
– KCDA – ஊடகப்பிரிவு கல்குடா: கல்குடாத்தொகுதியில் இயங்கிவரும் சமூகசேவை நிறுவனமான கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனம் ‘உதிரம் கொடுப்போம் உயிர்களைக்காப்போம்’ எனும் தொனிப் பொருளிலான இரத்ததான முகாம் ஒன்றை 2015.05.30ஆந் திகதி சனிக்கிழமை மட்-மம-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் நடாத்தியது.
-
கல்வீச்சுக்குப் பிற்பாடு பொறளை பள்ளிவாயல் (காணொளி)
– அகமட் இர்ஷாத் கொழும்பு: பொறளை ஜும்மா பள்ளிவாயலின் வீதி முகத்தோற்றத்திலுள்ள பளிங்குகளிலான ஜன்னல் கண்ணாடிகள் நேற்று 30.05.2015 மாலை 10.45 மணியளவில் இனம் தெரியாதோரினால் கல்வீச்சுக்கு உள்ளாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. இது சம்பந்த குறித்தபள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ரிக்காஸ் ஹாஜி கருத்துத் தெரிவிக்கையில் 10.45 மணியளவில்
-
பொறளை பள்ளிக்கு கல்வீச்சு: நடந்தது என்ன…?
கொழும்பு: சற்று முன்னர் பொறளை பள்ளிவாயல் கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட தாக்குதலால் பள்ளிவாயலின் சில கண்ணாடிகள் உடைந்துள்ள நிலையில்,
-
காத்தான்குடியில் நாளை ‘மஸ்ஜிதுர் ரஹ்மா’ புதிய பள்ளிவாசல் திறப்புவிழா
– புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: காத்தான்குடி 6ம் குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘மஸ்ஜிதுர் றஹ்மா’ பள்ளிவாசல் நாளை (31.05.2015) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு திறந்து வைக்கப்படும் என அப்பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்போது பிரதம அதிதியாக துருக்கி பின் ஜாபிர்அல் கிதாமி அல் உதைமி அவர்களும், விஷேட அதிதியாக அல்ஹாஜ் ஐ.எல்.எம். ஹாஷிம் அஷ்சூரி அவர்களும் கலந்து கொள்ள இருப்பதுடன் உள்ளுர் உலமாக்கள், பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
-
மியன்மாரில் முஸ்லிம்களுக்கெதிராக நடாத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து ஏறாவூரில் நேற்று ஆர்ப்பாட்டம்
எம்.எஸ்.எம்.ஸப்றாஸ் ஏறாவூர்: உயிரியல் உரிமைகளுக்கான எல்லையற்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். ஏறாவூர் முகைதீன் ஜும் ஆப்பள்ளிவாயல் முன்றலிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் ஏறாவூர் நகர சபை முன்றலில் முடிவுற்றது.
-
காத்தான்குடியில் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய பல்கலைக்கழக, உயர்கல்வி கற்போருக்கான வருடாந்த இஜ்திமா
ஆசிர் காத்தான்குடி: அல்லாஹ்வின் உதவியால் இலங்கையில் உள்ள அனைத்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கான இஸ்லாமிய ஆன்மீக ஒன்று கூடல் வருடா வருடம் தப்லீக் ஜமாஅதினால் எந்த இயக்க வேறுபாடுகளும் இன்றி மாணவர்களின் ஈமானிய சிந்தனையை அதிகரிக்கும் நோக்குடனும், தான் கற்க கூடிய காலத்திலும், எந்த சூழலிலும் ஒவ்வொரு மாணவர்களும் அல்லாஹ்வின் கட்டளைகளை பேணி,