பெண்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

protest– எச்.எம். பாத்திமா ஷா்மிலா

மட்டக்களப்பு: பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் என்பன இடம்பெற்றன. அனர்த்தத்திற்கு எதிரான பெண்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம் மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் மணிக்கூட்டுக்கோபுர முன்றலில் இடம் பெற்றது.

நாடளாவிய ரீதியில் துஷ்பிரயோகத்தினால் பலியான மற்றும் பாதிக்கபட்ட பெண்கள் தொடர்பான விபரங்களும் வைக்கப்பட்டிருந்தன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகுள் ஒழிக்கப்பட வேண்டும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு நீதிவேண்டும் போன்ற வாசகங்கள் உட்பட பல் கோசங்கள் எழுப்பப்பட்டன.

protest

இவ் ஆர்பாட்டத்திற்க்கு கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டதுடன் இதா்க்குப்பின்னரும் பெண்களுக்கு வன்முறை செய்யவேண்டாம் என கூறி ஒப்பந்தமாக கையெழுத்துக்களையும் சேகரித்தனா். இன்று இப்போராட்டம் நாடுகபூராகவும் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தப்பது.

protest (3)

protest (2)

Published by

Leave a comment