Category: Your Kattankudy
-
வன்னியில் பிசுபிசுத்துப்போன ஹக்கீமின் பிரச்சாரங்கள்
– அஸ்மி பெரியமடு மன்னார்: வன்னி மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடும் முகா வேட்பாளர்களை ஆதரிக்கும் ஹக்கீம் தலைமையிலான கூட்டங்கள் பிசுபிசுத்துப் போயுள்ளதாக தெரியவருகின்றது. திங்கட்கிழமை விஷேட ஹெலிகொப்டர் மூலம் மன்னார் மாவட்டத்திற்கு சென்ற ஹக்கீம் பெரியமடு, அடம்பன் போன்ற பகுதிகளுக்கும் விஜயம் செய்திருந்தார்.
-
கெத்தாராம சம்பவம்: நான்கு பேர் கைது , 2 பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயம்
கொழும்பு: கெத்தாராம விளையாட்டு மைதானத்தில் இலங்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளின் ரசிகர்களிடையே இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப் பதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேக்கர தெரிவித்தார்.
-
கட்சிகள், வேட்பாளர்களுக்கு கண்டிப்பான அறிவுறுத்தல்
கொழும்பு: போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் தொகுதிகளில் தேர்தல் அலுவலகமொன்றை அமைப்பதற்கு தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளார். அத்துடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும்போது 15 முதல் 25 பேர் வரையில் மட்டுமே செல்ல வேண்டுமென்றும் தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
-
‘தேர்தல் முடியும் வரை அலரி மாளிகையினைக் கண்காணியுங்கள்’ ரணில்
– எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையில் கட்சி அரசியல் நடவடிக்கைகள் இடம் பெறுகின்றதா என்பதைக் கண்டறிவதற்காக தேர்தல் அதிகாரிகளை ஈடுபடுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கேரிக்கை விடுத்துள்ளார்.
-
நீர்ச்சறுக்கு போட்டியில் வீரரைத் தாக்கிய சுறா (காணொளி)
கெப்டவ்ன்: நீர்சறுக்கு (சேர்ஃபிங்) விளையாட்டு போட்டி ஒன்றின் போது வீரர் ஒருவரை சுறா மீன் தாக்கியது. ஆனால், அவர் தனது நீர் சறுக்கு பலகையின் உதவியுடன் அதன் தாக்குதலில் இருந்து தப்பி கரைக்கு வந்துவிட்டார்.
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும்11வது இலக்க சுயேற்சைக்குழு ஐக்கிய தேசியக் கட்சியிக்கு ஆதரவளிப்பதென தீர்மானம்
மட்டக்களப்பு: எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் எம்.ரி.உவைஸ் தலைiயிலான 11வது இலக்க சுயேற்சைக்குழு ஐக்கிய தேசியக் கட்சியிக்கு ஆதரவளிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சுயேற்சைக்குழுவின் தலைமை வேட்பாளர் எம்.ரி.உவைஸ் (20.7.2015)தெரிவித்தார்.
-
“மற்றவர்கள் தோற்பதால் மகிழ்ச்சியடைவதற்கோ அல்லது அவர்கள் வெல்வதால் கவலையடைவதற்கோ சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்படவில்லை”
ஏறாவூர்: மற்றவர்கள் தோற்பதால் மகிழ்ச்சியடைவதற்கோ அல்லது அவர்கள் வெல்வதால் கவலையடைவதற்கோ சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்படவில்லை என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
-
எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களின் அணுகுமுறையில் மாற்றம் அவசியம்
– எம்.ஐ. அப்துல் நஸார் காத்தான்குடி: உணவு, உடை மற்றும் உறையுள் ஆகியன ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளாகக் காணப்படுவதாகவே நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் மனிதத் தேவைகள் விரிவடைந்து சென்று விட்டதனால் பயணம் என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாக கணிப்பிடப்பட வேண்டியதாக மாறியுள்ளது. வாழ்க்கை என்பது ஒரு பயணமே என அறிஞர்களும் ஆன்மீகவாதிகளும் குறிப்பிடுவது பயணம் என்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகின்றது.
-
தகவல் அறியும் உரிமை மற்றும் சட்டவிரோத தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் கிழக்கு ஊடக சங்கத்தின் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்
மட்டக்களப்பு: பொதுமக்களுக்குள்ள தகவல் அறியும் உரிமை மற்றும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை வெளிப்படுத்தும் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு கௌரவம், வெகுமதி போன்ற ஊக்குவிப்புக்களை வழங்குவது தொடர்பாக கிழக்கு ஊடக சங்கம் அதன் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வின்
-
SLMC + NFGG ஆகியன இணைந்து நடாத்திய மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான முதலாவது பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று (19.07.2015) காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் இடம்பெற்றது.
-
இஸ்லாத்தின் பெயரிலான வன்முறைகள்
– அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) சமகால உலகில் சில குழுக்கள் தமக்கு இஸ்லாமியப் பெயர்களை சூட்டிக் கொண்டு வன்முறைகளில் ஈடுபட்டு வருவது உலகம் அறிந்த உண்மையாகும். மெய்சிலிர்க்க வைக்கும் சித்திரவதைகள், தற்கொலைத் தாக்குதல்கள் போன்றன இக்குழுக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.