“மற்றவர்கள் தோற்பதால் மகிழ்ச்சியடைவதற்கோ அல்லது அவர்கள் வெல்வதால் கவலையடைவதற்கோ சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்படவில்லை”

bazeerஏறாவூர்: மற்றவர்கள் தோற்பதால் மகிழ்ச்சியடைவதற்கோ அல்லது அவர்கள் வெல்வதால் கவலையடைவதற்கோ சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்படவில்லை என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

அவர் (20.7.2015) அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்கள் 17.7.2015 வெள்ளிக்கிழமை மாலை எனது வீட்டுக்கு வந்து என்னுடன் கலந்துரையாடலில் பங்கு பற்றியதாகவும் அங்கு கருத்துக்கள் தெரிவித்த போது தலைவர் அதை மௌனமாக கேட்டுக் கொண்டு இருந்ததாகவும் சில சில சமூக வளைத்தளங்களில் செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இது பற்றிய உண்மை நிலையினை நான் தெளிவு படுத்த வேண்டி இருக்கின்றது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்கள் 17.7.2015 வெள்ளிக்கிழமை மாலை எனது வீட்டுக்கு சாதரணமாக நட்பின் அடிப்படையில் வீட்டுக்குச் செல்லும் அடிப்படையில் எனது ஏறாவூர் வீட்டுக்கு விஜயம் செய்தார்.

அப்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, ஏறாவூர், காத்தான்குடியைச் சேர்ந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் குழுமியிருந்தனர்.

சாதரணமாக வீட்டுக்கு விஜயம் செய்யும் போது நடைபெறும் உரையாடலே நடைபெற்றது.

சாதரணமான விடயங்கள் குறித்து கருத்து பரிமாறப்பட்டதுடன் சில சில அரசியல் கருத்துக்களும் இதன் போது பரிமாறப்பட்டன.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம் மற்ற கட்சிகள் சார்ந்த வேட்பாளர்களை தோற்பதை மைய்யப்படுத்தியிருக்க முடியாது. என்றும் நமது தேர்தல் வியூகம் நமது கட்சியை வெல்ல வைப்பதே பிரதான அம்சமாக இருக்க வேண்டும்.

நமது கட்சி வெல்கின்ற போது மாற்று கட்சிகளின் மற்ற வேட்பாளர்கள் தோற்கின்ற யதார்த்தம் இடம் பெற்றாலும் பிரதானமாக நமது வியூகத்தின் உப நிகழ்வாகும்.
மற்றவர்கள் தோற்பதால் மகிழச்சியடைவதற்கோ அல்லது அவர்கள் வெல்வதால் கவலையடைவதற்கோ சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்படவில்லை.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நமது சமூக விடுதலை இயக்கம் மட்டுமே என்ற கருத்துக்களே அங்கு உரையாடப்பட்டன. முரண்பாடாhன கருத்துக்கள் எதுவும் இங்கு இடம் பெறவில்லை. சுமூகமான கலந்துரையாடலே இங்கு இடம் பெற்றது.

வழமை போல நான் கூறுகிற கருத்துக்களை புரிந்து கொள்ளாதவர்கள் பற்றியே நான் அதிகம் அச்சப்படுகின்றேன்.

எங்களுடைய உரையாடல் புரிந்து கொள்ளப்படாமையே இந்த செய்தி வெளியீட்டுக்கும் காரணமாகும்.

Published by

Leave a comment