கொழும்பு: பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையில் கட்சி அரசியல் நடவடிக்கைகள் இடம் பெறுகின்றதா என்பதைக் கண்டறிவதற்காக தேர்தல் அதிகாரிகளை ஈடுபடுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கேரிக்கை விடுத்துள்ளார்.
அது சம்பந்தமாக கண்டறிவதற்கு பொதுத் தேர்தல் முடிவடையும் வரை அந்த இடங்களில் தேர்தல் அதிகாரிகளை ஈடுபடுத்துவதாயின் அதற்கான அனுமதி வழங்க முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல்கள் ஆணையாளரிடம் கேரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையில் கட்சி அரசியல் நடவடிக்கைகள் இடம் பெறுவதாக சிலர் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதிளிக்கும் முகமாகவே இந்தக்க கோரிக்கை பிரதமரினால் முன்வைக்கப்பட்டது.
Published by

Leave a comment